.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Saturday, July 28, 2012

ஸ்ரீ லங்கா தேவையற்ற ஜமாஅத் (SLTJ) கல்முனை, வழமை போன்று பொய்யைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஏதோ இரண்டு மூன்று தம்பிகள் சேர்ந்து கொண்டு புதிதாக தவ்ஹீத் பேசுகிறார்களாம். தஹபழ் ழமஉ என்ற நோன்பு திறக்கும் துஆவும் மறு ஆய்வில் ழஈபாம். அதைச் சொல்லச் சொல்லி (JASM) கல்முனைப் பள்ளியில் சொன்னார்களாம். அவர்கள் சொல்ல வில்லையாம். நோட்டிஸ் அடித்து விநியோகித்தார்களாம்.

வெட்கம் கெட்டவர்களே! இந்த துஆ ழஈபானது என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே JASM சொல்லி வருகின்றது. கல்முனைப் பள்ளி யிலும் பல தடவை சொல்லப்பட்டுள்ளது. முழுப் பூசனிக்காயை சோற்றுக்குள் மறைக்க முனைகிறீர்களே! உங்களது அயோக்கியத் தனத்தை என்னவென்று சொல்வது?


வாக்கை மீறிய நயவஞ்சகர்கள்
தமிழில் வார்த்தை இருக்கிறது என்பதற்காக ரவுடித்தனமான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது. பண்பாடு இல்லாத அறிவு ஷைத்தானுடையது என்பதை புரிந்து கொள்ளுங்கள். கழட்டி வைத்த போஸ்டரை இனிமேல் இப்பகுதியில் கொழுவமாட்டோம் என வாக்களித்து வாங்கிச் சென்று பின் அடுத்த நிமிடமே வாக்கை மீறிய கயவர்கள் நீங்களன்றோ.

JASM துணிச்சலுடன் தொய்வின்றி அதன் ஏகத்துவப் பணியை என்றும் போல் இன்றும் செய்துதான் வருகின்றது. அணிந்திருக்கும் கறுப்புக் கண்ணாடிக் குள்ளால் பார்த்தால், அல்லது பொய்யை உண்மையாக்க முனையும் நோக்கத்தில் பார்க்கின்ற உங்களுக்கு அப்படித்தான் புரியும். காடு வெட்டி, கல் முள் அகற்றி பாதையை செப்பனிட்ட பின் வந்து அப்பாதையில் நின்று கொண்டு இதை இப்படிச் செய்தது நாங்கள்தான் எனக் கூக்குரலிடுவது உங்களதும் உங்களைப் போன்றோரதும் தொழில் என்பது உங்களைத் தெரிந்தோருக்கும், கல்முனை தவ்ஹீத் வரலாறு அறிந்தோருக்கும் நன்கு தெரியும். JASM ன் தஃவா வரலாறு நீண்டது. நெடியது. அதன் சமூகப் பணிகளும் அவ்வாறே நாணயமானது. தேவைப்படும்போது தொடரப்படும்.

அப்பளுக்கில்லாமலும் நிபந்தனைகளெதுவுமில்லாமலும் மனிதாபிமான உதவிகளை பல வருடமாகச் சமூகத்துக்குச் செய்து வரும் JASM ன் பணிகளை கண்டு சகிக்க முடியாத சண்டாளர்களாகிய நீங்கள் JASMன் பணிகளில் சேற்றைப் பூச நினைக்கிறீர்கள். ஆனால் அது மக்களிடத்தில் வேகாது. அதைச் சொல்லவா? இதைச் சொல்லவா எனப் பூச்சாண்டி காட்டி மிரட்டினால் பொய்கள் உண்மையாகி விடாது. முடியுமானால் நிரூபியுங்கள் ஆதாரங்களுடன். பொய்களை எவனாலும் உளர முடியும்.

அல்லாஹ்வின் பண்பையும், ஸஹீஹான ஹதீதுகளையும் மறுக்கும் கூட்டம்
அல்லாஹ் இரவின் பிற்பகுதியில் கீழ்வானத்துக்கு இறங்குகிறான் என்ற அல்லாஹ்வின் பண்பை அறிவுக்கு முரண் என்ற காரணம் காட்டி மறுக்கும் உங்களது வழிகெட்ட ஷைத்தானியத்தை எமது பகுதியில் பறைசாற்ற வேண்டாம் என்றுதான் JASM சொல்கிறது. ஆதாரபூர்வமான ஹதீதுகளை உங்களது மாட்டுப் புத்திக்குப் புலப்படவில்லை என்பதால் மறுக்கும் நீங்கள், முஃதஸிலா மற்றும் வழிகெட்ட பிரிவுகளின் தாக்கங்களால் நோய்வாய்ப்பட்டு மனக்குழப்பமடைந்துள்ள நீங்கள் உங்களது நச்சுக் கருத்துக்களை எமது பள்ளிவாசல் முன் சொல்ல வேண்டாம் என்றுதான் JASM சொல்கின்றது. நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக புகாரி உட்பட பல ஹதீஸ் கிரந்தங்களிலும் பதிவாகியுள்ள ஸஹீஹான ஹதீஸை தங்களின் செத்த அறிவுக்குப் புரியவில்லை என்பதால் பொய்யாக்கி, அந்த ஹதீஸை நம்புவர்கள் முஷ்ரிக்குகள் எனப் பத்வாக் கொடுத்துள்ள குறைமதியாளர் களாகிய உங்களது ரீல்களை JASM முன்னால் அவிழ்க்காதீர்கள் என்றுதான் JASM சொன்னது. இதைச் செய்வது கயமைத்தனமா? அல்குர்ஆன் தர்ஜமா பற்றிய முஜிபுர் றஹ்மானுடனான விவாதத்தின் போது அண்ணன் பிஜே அவர்கள் அல்குர்ஆனின் வசனமொன்றை இவ்வசனம் சரியான முறையில் வருவதானால் இப்படித்தான் வந்திருக்க வேண்டும் என குர்ஆனில் கூறப்பட்டுள்ள அமைப்பு சரியானதல்ல என்று அல்லாஹ்வின் பேச்சிலேயே பிழை கண்டு அல்லாஹ்வுக்கே பாடம் சொல்லிக் கொடுத்தார். அவரைத் தக்லீது செய்து கொண்டு நாம் தக்லீத்வாதிகளல்ல என அதிலும் புழுகிக் கொண்டிருக்கும் கபோதிகளாகிய உங்களது கபட நாடகங்களை JASM முன் கட்டவிழ்க்காதீர்கள் என்றுதானே சொன்னார்கள். இதைச் சொன்னது கள்ளத்தனமா?

இது மட்டுமல்ல உங்களது குள்ளநரி வேடம் களைய நிறையவே இருக்கிறது. அவ்வப்போது இன்ஷா அல்லாஹ் இனிவரும் கட்டுரைகளில் தெரிந்து கொள்ளலாம்...


5 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்

    //இந்த துஆ ழஈபானது என்பதை இரண்டு வருடங்களுக்கு முன்பே JASM சொல்லி வருகின்றது. கல்முனைப் பள்ளி யிலும் பல தடவை சொல்லப்பட்டுள்ளது. //

    நீங்கள் இவ்வாறுசொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? அந்தப்பள்ளி மஹல்லா வாசிசயிடம் கேட்டால் எப்ப சொன்னார்கள? என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்...? ஆதாரத்தோடு எழுதினால் அவர்களுக்கு தகுந்த பதிலடியாய் இருக்குமே...

    ReplyDelete
    Replies
    1. JASM பள்ளிவாசலில் மட்டுமல்ல பல இடங்களில் இந்த துஆ ழஈபானது என நானே பேசியுள்ளேன். கடந்த ரமழானுக்கு சில நாட்களுக்கு முன் கூட ரமழானை வரவேற்போம் என்ற தலைப்பில் பேசும்போது நான் இதைக் குறிப்பிட்டிருந்தேன். எப்ப சொன்னார்கள் என்று தங்களிடம் ஆச்சரியத்துடன் கேட்டவர்கள் சிலவேளை அந்த பயானில் இல்லாதிருந்திருக்கலாம் அல்லது வேறு பராக்கில் இருந்திருக்க வேண்டும். சொன்னதை அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான். அல்லாஹ்வை விட சிறந்த சாட்சி வேறு யாரும் இருக்க முடியாது.

      Delete
  2. சென்ற முறை ரமழானுக்கு முதல் முகம்மதி ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்ற குத்பா உரை ஒன்றில் தஹபழ் ழமஉ என்னும் துஆவும் ழஈபானதாகும், நோன்பாளியின் துஆக்கள் அங்கீகரிக்கப்படக்கூடியது என்ற வகையில் நாம் விரும்புவதை அல்லாஹ்விடம் கேட்டுக்கொள்ளலாம் என்று மௌலவி அவர்கள் சொன்னது எனக்கு இன்னமும் ஞாபகத்தில் உள்ளது

    ReplyDelete
    Replies
    1. ஞாபகமூட்டலுக்கு நன்றி جزاك الله خيرا

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete