இன்று 27. 10. 2012 சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு புனித ( ஈதுல் அழ்ஹா) ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை சாய்ந்தமருது அல்-இஸ்லாஹ் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் கடற்கரை வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட அல்இஸ்லாஹ் திடலில் நடைபெற்றது. ஆண்களும் பெண்களுமாக பெரும் திரளான மக்கள் இத்தொழுகையில் பங்கு கொண்டனர். திடல் போதாமலாகி விடுமளவு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பெருநாள் தொழுகையில் பங்கு கொண்டமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது மட்டுமல்ல நபிவழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற மக்கள்
.
Saturday, October 27, 2012
Saturday, October 20, 2012
(ஈதுல் அழ்ஹா) புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் 27.10.2012 சனிக்கிழமை சரியாக காலை 6.30 மணிக்கு சாய்ந்தமருது, கடற்கரை வீதி (பெண்கள் சந்தைக்கு அண்மையில் அமைந்துள்ள) கடற்கரை மைதானத்தில் சாய்ந்தமருது அல்-இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. சகல பொதுமக்களும் (ஆண்களும் பெண்களும்) வுழூச் செய்து கொண்டு நேரகாலத்தோடு முஸல்லாவுடன் சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பெருநாள் தொழுகைக்கு முன்னால் யாரும் தங்களது உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுத்துவிட வேண்டாம் என்பதையும் ஞாபகப்படுத்துவதுடன், சாய்ந்தமரு தவ்ஹீத் ஜமாஅத் (அல்-இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல்) கூட்டு உழ்ஹிய்யாவுக்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. விரும்புகின்ற சகோதரர்கள் இதிலும் பங்கெடுத்துக்கொள்ள முடியும். கூட்டு உழ்ஹிய்யா தொடர்பான விபரங்கள் தேவைப்படுவோர் 0777156179 / 0773672830 / 0773413653 / 0754283929 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் நபிவழியில் எமது கிரியைகளை நிறைவேற்றிட அனைவரும் உறுதி பூணுவோம்.
Saturday, October 13, 2012
4:42 PM
Aboo Hanan Salafy
விபத்துக்கள்
No comments
11.10.2012 வியாழக்கிழமை பகல் 1.30 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்று முன்னால் இடப்பக்கமாகத் திரும்பிய காரில் மோதுண்டு குடை புறண்டது. இறையருளால் சாரதியும் பயணிகளும் உயிர் தப்பினர். முச்சக்கர வண்டியில் பயணித்த 3 பெண்களும் ஒரு குழந்தையும் காயமுற்று அக்கறைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக அக்கறைப்பற்று பொலிசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். வாகனத்தின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.Wednesday, October 3, 2012
|
அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 1)
குறிப்பு: சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமாவில் மறுத்துள்ள நான்கு ஹதீஸ்கள் தொடர்பான உண்மை நிலையை விளக்கும் எண்ணத்துடன்தான் ‘மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள்’ தொடரை நாம் எழுதினோம். அதன் முதல் கட்டமாக எழுதப்பட்ட சூனியம் தொடர்பான ஹதீஸ் குறித்த எமது தொடர்தான் முற்றுப் பெற்றது. அடுத்த பகுதியை நாம் இப்போது ஆரம்பித்துள்ளோம்.
|
Tuesday, October 2, 2012
அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி
சூனியம் – தொகுப்புரை
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பதற்காகச் சகோதரர் பீஜே முன்வைக்கும் வாதங்களுக்கான மறுப்பை இது வரை பார்த்தோம். இந்தத் தொடரின் இறுதி அங்கமாக அவரது ஆக்கத்தின் முடிவு குறித்தும், நமது கட்டுரையின் தொகுப்புக் குறித்தும் இத்தொடரில் நோக்குவோம்.
|
Monday, October 1, 2012
12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இலங்கையின் அனைத்துப் பகுதியிலிருந்தும் சாரை சாரையாக வந்து பங்கேற்று மிக வெற்றிகரமாகவும், பிரயோசனமிக்கதாகவும் நடந்து முடிந்த இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஆறாவது தேசிய இஸ்லாமிய மாநாடு அயோக்கியர்களையெல்லாம் ஒரு கனம் ஆட வைத்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக காதியானிகள், முஃதஸிலாக்கள், முர்ஜிஆக்கள் போன்ற வழிகெட்ட கூட்டங்களின் கொள்கைகளில் சிலவற்றைத் தொகுத்தெடுத்து அதைத் தங்களது கொள்கையாகக் கொண்டு தவ்ஹீத் சாயத்தையும் அதற்குப் பூசி மக்களை வழிகெடுக்கும் முயற்சியில் மிக அண்மைக்காலமாக மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ரவுடிகளான SLTJ எனும் பெயரில் இயங்கும் காடையர்களை இம்மாநாடு கதிகலங்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)



.jpg)

