அண்ணன் பிஜேயின் தவறான வாதங்கள் அவ்வப்போது பலராலும் ஆதார பூர்வமாக எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதே விடயங்களை அலாதியாக நானும் எழுத வேண்டிய தேவை கிடையாது. SLTJ கல்முனை என்ற கும்பல் கல்முனை JASM பற்றி விட்ட கதையளப்புகளையும் பொய்யையும் வெளிக்காட்டுவதே நமது நோக்கமாகும். யார் எதைச் சொன்ன போதிலும் சரியே. அல்குர்ஆனுக்கு ஆதார பூர்வமான ஹதீஸ் ஒரு போதும் முரண்படாது அது முரண்பாடாக நமக்கு தோன்றினாலும் கூட என்பவை பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையோடு ஒவ்வொரு ஹதீஸையும் அணுகினால் சகலதுக்கும் பதில் கிடைக்கும். அவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகளை நாம் இங்கு கொடுப்பது போதுமானதாகும். மாறாக பேசப்பட்டதை மீண்டும் மீண்டும் பேசிப்பேசியிருப்பது தேவையற்ற ஒன்றாகும். அந்த வகையில் இதுவரை மூன்று பாகங்கள் அல்குர்ஆனுக்கு ஆதார பூர்வமான ஹதீஸ் ஒரு போதும் முரண்படாது என்பது பற்றி வேறு தளங்களிலும் பத்திரிகையிலும் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறானவற்றை மீள்வெளியீடாக இங்கு நாம் வெளியிடுவது போதுமானதாகும்.
SLTJ கல்முனை ஆரம்பித்ததும் பயந்து விட்டோமாம் எனத் தம்பி நிக்றாஸ் அடிக்கடி பசப்புகிறார். அப்படி உங்களைப் பயப்பட என்னதான் இருக்கின்றது. தூய மார்க்கத்தைப் போதிப்பது என்பது அதை அறிந்தோரின் கடமையாகும் என்ற வகையில் 1948ம் ஆண்டிலிருந்து கல்முனையில் JASM அதன் தஃவாப் பணியைச் செவ்வனே செய்து கொண்டுதானிருக்கின்றது. அதற்காகப் பல சோதனைகளையும் அனுபவித்துத்தான் உள்ளது. அதே வழியில் சற்றும் பிசகாது இன்றும் தஃவாவை உறுதியாக முன்னெடுத்தே செல்கின்றது. இயக்கம் வளர்த்து நாம் செய்தோமா நீ செய்தாயா என்று வீராப்புப் பேசுவதை JASM கல்முனை ஒருநாளும் செய்யாது இன்ஷா அல்லாஹ். அது தஃவாவின் தூய்மையைக் கெடுத்து விடும். அதுபோலவே மற்றவர் செய்தவற்றை தான் செய்ததாக தம்பட்டமடித்துக் கள்ளத்தனமாக பீற்றிக்கொண்டு உரிமை கொண்டாடும் அயோக்கியத் தனத்திலும் ஈடுபடாது. இவற்றையெல்லாம் மறந்து SLTJ கல்முனைதான் கல்முனையில் தஃவாப் பணி செய்வதாக பீற்றிக் கொள்கிறீர்களே! கல்முனையில் அப்படி புதிதாக நீங்கள் செய்தது என்ன? (JASM கல்முனை செய்யாத) அதைச் சொல்லுங்கள் உண்மையாளர்களாக இருந்தால்.

சூனியம் தொடர்பான ஹதீஸ், அதை நம்புபவன் முஷ்ரிக் என்ற உங்களது பத்வா தொடர்பிலான விளக்கங்கள், இது போன்ற இன்னும் பல விடயங்கள் பல தளங்களிலும் தெளிவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றது. (பார்க்க http://www.islamkalvi.com, http://srilankamoors.com போன்ற தளங்கள்) அவற்றை எப்படி நீங்கள் மழுப்புகிறீர்கள் என்பதும் அதைப் பார்ப்போர் அறிந்த விடயமே.
இது தொடர்பான கட்டுரைகள் உண்மை உதயம் சஞ்சிகையிலும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. கல்முனை JASM லும் அது விற்பனையாகின்றது. இந்த நிலையில் புதிதாக நான் ஒன்றும் எழுதத் தேவைப்படாது என்பதே எனது பார்வையாகும்.
எனினும் கல்முனை JASM தொடர்பான தங்களது பொய்யான வேக்காடுகளை வெளியிடும்போது அது பற்றி தெளிவுபடுத்துவது எனது பொறுப்பு என நான் கருதுகின்றேன். ஏனெனில் இது பற்றி வேறு யாரும் எழுதமாட்டார்கள். காரணம் அது பற்றி மற்றவர்களுக்குத் தெரியாததால். கல்முனையைச் சேர்ந்த ஒருவரால் மட்டுமே அதன் உண்மை நிலையைப் புரிய முடியும். இதற்கும் கூட நாம் பதிலளித்து நேரத்தை வீணடிக்க வேண்டிய தேவை வராது தங்களால் பரப்பப்படும் பொய்யான காழ்ப்புணர்வுமிக்க இச்செய்திகள் கல்முனையோடு மட்டும் நிற்குமென்றால். மாறாக உலகம் பூராவும் இப்பொய்கள் பார்க்கப்படுவதால் அவற்றைப் பொய் என தெரியாதோருக்கு உணர்த்த வேண்டிய தேவை உள்ளது. அதனால்தான் இது பற்றி எழுதப்படுகின்றது. வேண்டுமென்றே தூங்குபவர்களை விழிக்கச்செய்ய எம்மால் முடியாது என்பதும், நேர்வழியைக் கொடுப்பது அல்லாஹ்வின்பாற்பட்டது என்பதும் நாம் நன்றாக விளங்கியுள்ள ஒன்றாகும். தெளிவாகச் சொல்வதுதான் எமது பணியாகும்.
தங்களை JASM கல்முனை தங்களது பள்ளிவாசல் முன் துண்டுப் பிரசுரம் கொடுக்க அனுமதிக்காததற்கான காரணங்களில் சிலதாகத்தான் உங்களது வழிகெட்ட பத்வாவும், இறைவனின் பண்பான நுசூல் என்பதை மறுப்பதும் போன்ற தவறான கொள்கைகள் சுட்டிக்காட்டப்பட்டன. அவை பற்றிய விரிவான விளக்கங்கள் இஸ்மாயில் ஸலபியால் எழுதப்பட்ட போது அவரது வாதங்களைத் மறுக்க முடியாமல் பொய்யான குற்றச்சாட்டுக்களையும், தவறாகச் சித்தரிக்கப்பட்ட சில தகவல்களையும் அவரது தனிப்பட்ட வாழ்வோடு சம்பத்தப்படுத்தி திசை திருப்பப்பட்டது என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாகும். அசத்தியவாதிகளின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்பது மூஸா (அலை), பிர்அவ்ன் சம்பவம் நமக்குச் சொல்லித்தரும் பாடமாகும்.
இவ்வாறு எழுதிவிட்டு இஸ்மாயில் ஸலபியால் எழுதப்பட்ட விளக்கங்களுக்குப் பதிலளித்து விட்டதாக நீங்கள் வேண்டுமானால் நினைத்துக் கொண்டிருக்கலாம். நடுநிலையாகச் சிந்திப்போர் யாரும் ஏற்கமாட்டார்கள். மறை கழன்று மதி கெட்டுப் போனது யாருக்கு என்பதைப் புரிய தம்பி நிக்ராசுக்கு இன்னும் கொஞ்சக் காலம் எடுக்கும். உங்களது வழிகெட்ட இப்போக்கு தொடரும்போது குர்ஆன் மட்டும் போதும் என்ற நிலையில் உங்களைக் கொண்டு போய் நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை. பொறுத்திருந்து பார்க்கலாம்.
அடுத்து JASM கல்முனை நிர்வாகத்திற்கு தங்களால் அனுப்பப்பட்ட கடிதத்தை வெளியிட்டிருந்தீர்கள். அதிலும் எந்தளவு பொய்களையும், புரட்டுக்களையும் அபத்தமாக அள்ளி வைத்துள்ளீர்கள் என்பதற்கான தெளிவை அடுத்து எதிர்பாருங்கள்.

0 கருத்துகள்:
Post a Comment