.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Saturday, October 27, 2012

இன்று 27. 10. 2012 சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு புனித ( ஈதுல் அழ்ஹா) ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை சாய்ந்தமருது அல்-இஸ்லாஹ் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் கடற்கரை வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட அல்இஸ்லாஹ் திடலில் நடைபெற்றது. ஆண்களும் பெண்களுமாக பெரும் திரளான மக்கள் இத்தொழுகையில் பங்கு கொண்டனர். திடல் போதாமலாகி விடுமளவு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பெருநாள் தொழுகையில் பங்கு கொண்டமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது மட்டுமல்ல நபிவழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற மக்கள் தயாராகவே உள்ளார்கள் என்பதையும் எடுத்துக் காட்டியது. முழு ஊரும் ஒன்றிணைந்து பள்ளிவாசலில் பெருநாள் தொழும் பித்அத்தை விட்டொழித்து நபிவழியில் இதை நிறைவேற்ற முன்வந்தால் இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என மக்கள் பேசிக் கொண்டனர். தொழுகையும் பிரசங்கமும் அஷ்ஷெய்க் ஏ. கலீலுர் றஹ்மான் ஸலபி அவர்களால் நடாத்தப்பட்டது.




0 கருத்துகள்:

Post a Comment

Popular Posts