.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Monday, October 1, 2012


12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இலங்கையின் அனைத்துப் பகுதியிலிருந்தும் சாரை சாரையாக வந்து பங்கேற்று மிக வெற்றிகரமாகவும், பிரயோசனமிக்கதாகவும் நடந்து முடிந்த இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஆறாவது தேசிய இஸ்லாமிய மாநாடு அயோக்கியர்களையெல்லாம் ஒரு கனம் ஆட வைத்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக  காதியானிகள், முஃதஸிலாக்கள், முர்ஜிஆக்கள் போன்ற வழிகெட்ட கூட்டங்களின் கொள்கைகளில் சிலவற்றைத் தொகுத்தெடுத்து அதைத் தங்களது கொள்கையாகக் கொண்டு தவ்ஹீத் சாயத்தையும் அதற்குப் பூசி மக்களை வழிகெடுக்கும் முயற்சியில் மிக அண்மைக்காலமாக மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ரவுடிகளான SLTJ எனும் பெயரில் இயங்கும் காடையர்களை இம்மாநாடு கதிகலங்க வைத்தது என்றே சொல்ல வேண்டும்.

அறிஞர்கள் பல தலைப்புக்களிலும் ஆழமான ஆதாரங்களை அள்ளி வீசி, தூய இஸ்லாமிய கருத்துக்களை நபியவர்கள் சொன்ன பிரகாரமும், நேரடியாக நபியவர்களிடமிருந்து கேட்டு, விளங்கி நடைமுறைப்படுத்திய ஸலபுஸ் ஸாலிஹீன்களான ஸஹாபாக்கள் விளக்கிய பிரகாரமும் தங்களது சொந்தக் கருத்துக்களை மார்க்கமாகக் காட்ட முனையாமல் மிக அமானிதமாக உரையாற்றியமை இந்த மாநாட்டின் ஒரு சிறப்பம்சமாகக் குறிப்பிடலாம்.

அல்குர்ஆனை ஸலபுஸ் ஸாலிஹீன்களான ஸஹாபாக்கள் விளங்கியது தவறு, நாம் சொல்வதுதான் சரி என ஸஹாபாக்களையே தங்களைவிடத் தரக்குறைவாக மதிக்கும் மடயர்கள் நிறைந்து விட்ட இக்காலகட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மாநாடு உண்மையை உள்ளபடி உரத்துச் சொன்னது நிச்சயமாக தவ்ஹீதின் பெயரால் மக்களை சாக்கடையில் தள்ளும் SLTJ எனும் வம்பர்களின் அயோக்கியத்தனத்துக்கு விழுந்த மாபெரும் மரண அடி என்றே குறிப்பிடலாம்.

பக்குவமற்ற, பண்பாடற்ற சில சிறுவர்கள் (அவர்கள் ஒழுக்கப்படுத்தப்பட வேண்டும். அவர்களது பெற்றோர்கள் இதில் கவனமெடுக்க வேண்டும் என்பது எமது அவா) ஒன்றிணைந்து SLTJ எனும் பெயரில் பல ஊர்களையும் அடையாளப்படுத்தி வெப்தளங்களை உருவாக்கி தப்பும் தவறுமாக எழுதி வருகிறார்கள். அந்த வரிசையில் கல்முனையில் நிக்ராஸ் என்ற ஒரு சிறுவனின் தலைமையில் நப்லி என்ற ஒரு பையனும் இன்னும் ஓரிரு  மனநோயாளர்களான பெரிசுகளும் இணைந்து SLTJ Kalmunai என்ற பெயரில் ஒரு இணையதளத்தை இயக்குகின்றனர். இத்தளத்திலே நப்லி என்ற பையன் இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஆறாவது தேசிய இஸ்லாமிய மாநாடு பற்றி எழுதியுள்ளார். ஏதோ மாநாட்டின் குறைநிறைகளை எழுதுவார் தம்பி. குறைகள் இருப்பின் நாமும் இனிமேல் அவற்றைச் சரிசெய்யலாம் என்று நினைத்து வாசித்தால் பழைய குருடி கதவைத் திறடி என்றபடிதான் அமைந்திருந்தது.

மாநாட்டைப் பற்றி எழுதியவர் இடையிலே தடம்புறண்டு வேறு விடயத்துக்கு மாறி வழமை போன்று கதையளப்புகளையும், கப்ஸாக்களையும் சம்பந்தமில்லாமல் உளறித்தள்ளியிருந்தார். இவ்வாறுதான் சில மாதங்களுக்கு முன்னரும் JASM ன் கல்முனைக் கிளை பற்றி சிறுவன் நிக்ராஸ் புலம்பிய போது ”சொன்னது போல் பொய்யர்கள் புலம்பி விட்டார்கள்” என்ற தலைப்பில் எமது இத்தளத்திலேயே அதை நாம் எழுதியிருந்தோம்.

பறகஹதெனிய என ஊரின் பெயரைக்கூட சரியாக எழுதத்தெரியாத தம்பி நப்லி அப்பட்டமான பொய்களை அள்ளி இறைத்திருந்தார். அல்லாஹ்வின் மீதே துணிந்து பொய் சொல்லும் கூட்டம் நம்மீது சேற்றை அள்ளி வீசுவதற்காக பொய்யுரைப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. திரைப்படத்தின் மூலம் அல்லாஹ்வின் தூதர் அவமதிக்கப்பட்ட போது இச்சமூகம் சீறி எழுந்தது. கள்வனை மக்கள் கள்வன் கள்வன் எனச் சொல்லிக் கொண்டு துரத்தியபோது கள்வனும் சேர்ந்து கள்வன் கள்வன் எனக் கத்திச் சென்ற கதை மாதிரி இக்கும்பலும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால், ”உஹது மலையளவு தங்கத்தை தர்மம் செய்திடினும் நீங்கள் ஸஹாபாக்களின் அந்தஸ்தை அடைந்துவிட முடியாது” என அல்லாஹ்வின் தூதரால் புகழ்ந்துரைக்கப்பட்ட ஸஹாபாக்களை எள்ளிநகையாடும் ஒரு கூட்டம்தான் இந்த SLTJ எனும் கூட்டமும். இதை அறிந்த சில மக்கள் இவர்களை அங்கீகரிப்பார்களா என்ன?

இந்த அடிப்படையில்தான் கல்முனையில் நடந்தது போல் பறகஹதெனியவிலும் இவர்களது ஸஹாபாக்களைக் கொச்சைப்படுத்தும் போக்கைத் தெரிந்து கொண்ட ஊர் மக்களில் சிலர் இவர்களுக்கெதிராக கிளர்ந்தெழுந்தனர். இதை JASM தான் செய்தது என காழ்ப்புணர்ச்சி கொண்டு பேசித் திரிந்தனர் இக்கயவர்கள். தம்பி நப்புலி! மாவதகம பொலீசில் நடந்ததாக  உள்ளங் கை நெல்லிக் கனி போல தெளிவான சில பச்சைப் பொய்களை எழுதியுள்ளீர்களே, இதனை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு உங்களால் கூற முடியுமா? (சத்தியமிட்டுச் சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது என்பது வேறு விடயம்).

////காவல் அதிகாரியிடம் ' தவ்ஹீத் வாதிகள் சிலையை வணங்க வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்று போட்டுக்கொடுத்தான்//// என அறிவுக்கே பொருத்தமில்லாத பொய்யை அவிழ்த்து விட்டுள்ளான் தம்பி நப்லி. தவ்ஹீத் வாதியல்ல ஒட்டு மொத்த முஸ்லிம்களும் சிலை வணங்குவதை எதிர்க்கிறார்கள் என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை. இவ்வாறிருக்க பொலீஸிடம் இப்படிச் சொன்னார்கள் என்ற இந்த ரீலை எந்த மடயனாவது நம்புவானா?

நல்ல கருத்துக்களும், இஸ்லாத்துக்கு விரோதமில்லா செய்திகளும் எப்பத்திரிகையில் வந்தாலும் அதை அங்கீகரிக்கும் மனப்பாங்கு ஒவ்வொருவரிடத்திலும் இருக்க வேண்டும். நல்லவை பலதைத் தாங்கி வரும் பத்திரிகை / சஞ்சிகை ஒன்று சில பிழையான கருத்துக்களையும் முன்வைக்கிறது என்பதற்காக முழுமையாக அதை ஒதுக்க வேண்டியதில்லை. தவறைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும். தவறுகளும் உள்ளது என்பதற்காக நல்ல பல செய்திகளையும் தாங்கி வரும் ஒரு ஏட்டை முற்றாக ஒதுக்க வேண்டுமெனில், அதிகமான ஹதீஸ் கிரந்தக்களை நாம் ஆதாரமாகச் சொல்லவே முடியாது. பலயீனமான ஏன் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளுடன் கூடிய ஹதீஸ் கிரந்தங்கள் எத்தனை உள்ளன? அவற்றை நீங்களும்தானே ஆதாரமாகக் காட்டுகிறீர்கள். அறிவு கெட்ட ஜென்மங்களா கொஞ்சமாவது எழுத்துக்கும் அறிவுக்கும் சம்பந்தப்படுத்தக் கூடாதா?

அல்ஹஸனாத்தை அங்கீகரித்த இஸ்மாயில் ஸலபி ”அல்ஹஸனாத் திருந்த வேண்டும்” என்ற தலைப்பில் அல்ஹஸனாத்தின் தவறைச் சுட்டிக்காட்டி எழுதியது உங்களது கண்களில் படாமல் மறைந்த மாயமென்னவோ? ”தஃவாவின் அனுகு முறை” என்ற தலைப்பில் பல தவறுகள் குறிப்பாக சில்லறைப் பிரச்சினை விவகாரம் சுட்டப்பட்டு எழுதப்பட்டவைகள் எல்லாம் வேண்டுமென்றே கண்டுகொள்ளப்படாமல் பினம் தேடி அலையும் நாயை விடக் கேவலமாக குறைதேடி அலைந்து கிடைக்கவில்லை என்ற நிலையில் அப்பட்டமான பொய்களை அவிழ்த்து விடுவதால் தெரியாத மக்களை நம்ப வைத்து அதில் இன்பம் காணலாம் என மனப்பால் குடிக்காதீர்கள். உங்களது குள்ள நரி வேடம் தோலுரித்துக் காட்டப்படும் வரை அல்லாஹ்வி்ன் உதவியால் எனது கரம் எழுதுவதிலிருந்து ஓயாது.

///ஏன்? எதற்காக ? என்ன ஆதாரம் ? என்று அணுஅணுவாக கேள்வி கேட்டுப்பின்பற்றுவோர் தவ்ஹீத்வாதி. எந்த கேள்வியையும் கேட்காமல் தலைவர் சொல்வதுதான் தன் வழி என்று சாக்கடையில் விழுவது சமாதி வழிபாட்டில் உள்ளவன் கொள்கை//// என தம்பி நப்லி எழுதியுள்ளது அவருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும்தான் மிகப் பொருத்தம். அண்ணன் பி.ஜே சொல்லி விட்டால் அதை வஹியாக நம்புவோர் நீங்களன்றோ. அல்குர்ஆனின் எழுத்துக்களில் பிழை கண்ட மேதை (?) அதைச் சொன்னபோது அதற்காகக் கூஜாத் தூக்கிக் கொண்டு கிளை அமைத்துச் செயற்படும் சிறுகும்பல் நீங்களன்றோ? ஆதலால் இது உங்களுக்குத்தானே பொருந்தும். எங்களில் யாரும் யாரையும் அப்படிப் பின்பற்றவில்லையே. 

தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா என்பது ஒரு கல்விக்கூடமா? இயக்கமா? என்ற தெளிவு கூட இல்லாமல் தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா என்ற ஒரு அறபுக் கலாபீடத்தை ஒரு இயக்கமாகச் சொல்லி பொய்களை ஆரம்பித்திருப்பதே பின்னால் சொல்லப்படும் செய்திகளும் இப்படித்தான் உண்மையற்றவைகளாகவும், தெளிவற்றவைகளாகவும் இருக்கும் என்பதற்கான ஒரு சான்றாகவே உள்ளது.

மொத்தத்தில் ஒட்டுமொத்த கட்டுரையும் ஆதாரபூர்மான செய்திகளைப்போல் சித்தரித்துக்காட்டப்பட்ட, திட்டமிட்டுச் சொல்லப்பட்டுள்ள பொய்களாகும். ஹதீதை இட்டுக்கட்டுபவர்கள் அதனை மக்கள் இலகுவில் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக உண்மையான நபியவர்களின் வார்த்தைகளோடு இணைத்து சில சொந்த விடயங்களைச் சொருகி விடுவார்கள். அது மாதிரி எங்காவது நாம் பங்கு பற்றிய உண்மையான நிகழ்வுகளைத் திகதியுடன் கூறி, அதில் நாம் சொல்லாதவைகளை, அங்கீகரிக்காதவைகளை சொன்னதாகவும், ஏற்றுக்கொண்டதாகவும் மிக அழகாக புணைந்துள்ளார் தம்பி நப்லி. அறிவு இருக்கிறதோ இல்லையோ பொய்யை பொய்யாக இலகுவில் மக்கள் கண்டுகொள்ள முடியாதளவு இட்டுக்கட்டிச் சொல்வதில் நல்ல திறமை பொதுவாகவே இந்தக் கும்பலைச் சேர்ந்த அனைவருக்கும் உள்ளது.

இறுதியாக அவர் என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? ///அவர்களைப்பற்றி அறியாத மக்கள் அங்கே சென்று கலந்துகொண்டார்கள். சீக்கிரத்தில் அவர்களின் அயோக்கியத்தனத்தை மக்கள் புரிந்து கொண்டு சத்தியப்பாதையில் செல்லும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்துடன் இணைந்து கொண்டு இந்நாட்டில் தவ்ஹீத்தை வளரச்செய்யும் காலம் தொலைவில் இல்லை/// எனக் குறிப்பிடுகிறார். 12 ஆயிரத்தையும் தாண்டிய மக்கள் வெள்ளம் மாநாட்டில் கலந்து கொண்டது. இவர்கள் அறியாதவர்களாம். மன நோயாளர்கள் சிலர் இணைந்து ஆரம்பித்துள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் இணைந்துள்ளவர்கள்தான் அறிவுள்ளவர்களாம். கதையளப்பு நன்றாகத்தானிருக்கிறது.

அறியாது உங்களோடு வந்திணைந்த அறிவுள்ள எத்தனை பேர் உங்கள் அயோக்கியத்தனத்தை அறிந்து உங்களை விட்டும் வெளியேறினார்கள் என்பதைக் கொஞ்சம் அசை போட்டுப் பாருங்கள் உண்மை தெரியும். உங்கள் கட்டுரையின் அதிகமான வரிகள் உங்களுக்கே பொருத்தமானதாக இருக்கிறது.

இலங்கை ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஆறாவது தேசிய இஸ்லாமிய மாநாடு ஏற்பாட்டாளர்களால் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையையும் தாண்டிய மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்து நிறைவுற்றது வெள்ளிடை மலை. எதிர்பார்ப்புகளுடன் ஏற்பாடு செய்யப்பட்ட 10,000 பேருக்கான கூடாரம் போதாமல் வழிந்து வெளியே மக்கள் பெருங்கூட்டமாக நின்று கொண்டே உரைகளைச் செவிதாழ்த்தியமை உண்மைக்கு அழிவில்லை என்பதையே காட்டுகின்றது. ”நபியே! கூறுங்கள், சத்தியம் வந்துவிட்டது. அசத்தியம் அழிந்து விட்டது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்.” - அல்குர்ஆன்.



தொடர்ந்தால் தொடரும் இன்ஷா அல்லாஹ்

0 கருத்துகள்:

Post a Comment