.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Friday, September 13, 2013



- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
அபூஹுதைபா, ஸஹ்லா தம்பதிகள் ஸாலிம் என்ற ஒரு சிறுவரைத் தமது வளர்ப்புக் குழந்தையாக வளர்த்து வந்தார்கள். ஸாலிம் என்பவர் அபூஹுதைபாவின் மகன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். அல்குர்ஆன் இந்த உறவு முறையைத் தடுத்த போது ஸாலிம் இளைஞராக இருந்தார். அவர்கள் ஸஹ்லா அதாவது, அவரது முன்னைய நாள் வளர்ப்புத் தாயார் சாதாரண ஆடையுடன் இருக்கும் போது உள்ளே வந்து செல்வதால் அபூஹுதைபாவின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அது பற்றி ஸஹ்லா (ரழி) அவர்கள் நபி(ச) அவர்களிடம் வினவிய போது ஸாலிமுக்குப் பாலூட்டுமாறும், அதன் மூலம் தாய்-மகன் உறவு ஏற்பட்டுவிடும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். அவரும் அப்படிச் செய்தார் என புஹாரி, முஸ்லிம் உட்பட பல ஹதீஸ் நூற்களில் ஆதாரபூர்வமான ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
கிண்ணியாவில் காணப்பட்ட பிறை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மற்றும் பெரிய பள்ளி நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டு 9.8.2013 பெருநாளாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நாட்டில் பல பாகங்களிலும் 8.8.2013 ஆம் திகதியன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. JASM தலைமையகத்திலும், கிளைகளிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்திற்கு மாற்றமாகப் பெருநாள் கொண்டாடப்பட்டது. இவ்வாறு பெருநாள் கொண்டாடியவர்கள் தவ்பா செய்ய வேண்டும்; விட்டவர்கள் நோன்பைக் கழாச் செய்ய வேண்டும் என பத்வா வழங்கப்பட்டதினாலும் மக்களுக்கு எமது நிலையைத் தெளிவுபடுத்தும் கட்டாயம் இருப்பதினாலும் நடந்தது என்ன என்பது ஒரு வரலாற்றுப் பதிவாக வேண்டும் என்பதினாலும் இது குறித்து இங்கு விரிவாக விபரிக்கப்படுகின்றது.

Friday, August 23, 2013


S.H.M. இஸ்மாயில் ஸலஃபி                                           

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுக்கும் நவீன தவ்ஹீத்வாதிகள்,  சுலைமான் நபி அவர்கள் தொடர்பாக வரும் ஹதீஸில்  எழுப்பும் மற்றுமொரு (திக) பகுத்தரிவு கேள்வி யாதெனில்,

(ஒருமுறை இறைத்தூதர்) தாவூத்(அலை) அவர்களின் புதல்வர் சுலைமான்(அலை) அவர்கள், 'நான் இன்றிரவு (என்னுடைய) நூறு துணைவியரிடமும் சென்று வருவேன். அப்பெண்களில் ஒவ்வொருவரும் இறைவழியில் அறப்போர் புரியும் (வீரக்) குழந்தை ஒன்றைப் பெற்றெடுப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது சுலைமான் (அலை) அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) 'இன்ஷா அல்லாஹ் - இறைவன் நாடினால்'' என்று (சேர்த்துச்) சொல்லுங்கள்'' என்றார். (ஆனால்,) சுலைமான்(அலை) அவர்கள், 'இன்ஷா அல்லாஹ்' என்று கூறிவில்லை; மறந்துவிட்டார்கள். அவ்வாறே சுலைமான் (அலை) அவர்களும் தம் துணைவியரிடம் சென்றார்கள். ஒரே ஒரு மனைவியைத் தவிர வேறெவரும் குழந்தை பெற்றெடுக்கவில்லை. அந்த ஒரு மனைவியும் (ஒரு புஜமுடைய) அரை மனிதரைத்தான் பெற்றெடுத்தார். 

Friday, August 9, 2013

"அந்தக் கடிதம் உண்மையானது. அதின் நானே கையொப்பமிட்டேன்!" - கிண்ணியா ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் (நளீமி).
கிண்ணியாவில் பிறை கண்டது உறுதியானதால் 2013-08-08 வியாழன் நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா வெளியிட்ட கடிதம் போலியானது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி அவர்களின் குற்றச்சாட்டுக்கு - கிண்ணியா ஜமியதுல் உலமா தலைவர் அஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் (நளீமி) அவர்கள் கிண்ணியா நெட் இற்கு வழங்கிய விளக்கம்!!
முழு விளக்கங்களும் ஊடக அறிக்கையாக வெளியிடப்படும். 

Sunday, August 4, 2013

சாய்ந்தமருது அல்இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசலில் இன்று 04.08.2013ம் திகதி ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முகம்மதிய்யாவின் அனுசரனையுடன் நடைபெற்றது. அதிகமான சகோதரர்கள் இதில் பங்குபற்றினர். அல்ஹம்துலில்லாஹ்.


Sunday, July 21, 2013

N K.அப்துல்லாஹ்

இஸ்லாத்தின் அடிப்படைகள் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான ஹதீஸும், இவ்விரு அடிப்படைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்துவதும், அவற்றிலுள்ள செய்திகளை அர்த்தமற்றவையாக்குவதும் முஸ்லிம்களுக்குள் தோன்றிய வழி கேடர்களின் செயல். குறிப்பாக ஹதீஸ்கள் விஷயத்தில் இந்த வழிகேடர்கள் செய்யும் விஷமம் அதிகம். தற்காலத்தில் நமது தமிழகத்தில் தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கெல்லாம் தலைமை தாங்குவதாக சொல்லிக்கொள்ளும் சிலரும் ஹதீஸ்கள் விஷயத்தில் இத்தகைய விஷமத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை குர்ஆனுக்கும் அறிவுக்கும் முரண்படுவதாக சித்தரித்து அவற்றை மறுப்பதும் கேலி கிண்டல் செய்வதும் இவர்களின் வழிகேட்டுக்கு தெளிவான ஆதாரமாகும்.

Saturday, July 20, 2013

அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 

இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.

(ஒரு வரலாற்றுத் துரோகம் வெளிவருகிறது)

M S. ரஹ்மத்துல்லாஹ்                                         
கேள்வி:
ஸாலிம்(ரழி) அவர்களுக்கு ஸஹ்லா(ரழி) அவர்கள் பால் கொடுத்தார்கள் என்று ஹதீஸ் கூறுகின்றது. இந்த ஹதீஸை மறுப்பவர்கள் பின்வருமாறு வாதிக்கின்றனர். ஒரு பெண்ணின் மார்பகத்தில் பால் வரவேண்டும் என்றால் அவளுக்கு சிறு குழந்தை இருக்க வேண்டும். ஸாலிம்(ரழி) அவர்களுக்கு பால் புகட்டும் போது ஸஹ்லா(ரழி) அவர்களுக்குக் கைக்குழந்தை இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. கைக்குழந்தை இல்லாத போது அவர்கள் எப்படி பால் கொடுத்தார்கள்?
இந்த வாதத்தின் உண்மை நிலை என்ன? இதற்கான தெளிவை உண்மை உதயத்தின் மூலமாக எதிர்பார்க்கின்றேன்.

Saturday, June 15, 2013

இன்று SLTJ என்ற ஒரு சிறு கூட்டம் பிஜே அவர்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டு இலங்கை மக்களையும் வழிகேட்டின் பால் அழைத்துக் கொண்டிருக்கின்றனா். சூனியம் பற்றிய தெளிவின்மையே இச்சிறு குழுவின் வழிகேட்டுக்கு முக்கிய காரணமாகும். அல்குர்ஆன் சுன்னாவின் ஒளியில் சூனியம் பற்றிய ஐயங்களுக்கு பதிலளிக்கும் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றினை இன்று 15.06.2013 சனிக்கிழமை மாலை 4.00 மணி தொடக்கம் மாளிகைக்காடு அல்ஹூசைன் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற முழுமையான ஏற்பாடுகள் சாய்ந்தமருது அல்இஸ்லாஹ் ஜூம்ஆ பள்ளிவாசலினால் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத் தெளிவுக்கு சரியானதோர் சந்தா்ப்பம். சந்தா்ப்பத்தைத் தவறவிடாதீா்கள். ஐயங்களுக்கான தெளிவினை வழங்குகின்றார் உண்மை உதய இஸ்லாமிய சஞ்சிகையின் ஆசிரியா் அஷ்ஷெய்க் SHM. இஸ்மாயீல் ஸலபி அவா்கள்.

Tuesday, April 16, 2013

இன்று SLTJ என்ற ஒரு சிறு கூட்டம் பிஜே அவர்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டு இலங்கை மக்களையும் வழிகேட்டின் பால் அழைத்துக் கொண்டிருக்கின்றனா். சூனியம் பற்றிய தெளிவின்மையே இச்சிறு குழுவின் வழிகேட்டுக்குக் காரணமாகும். எனவே சூனியம் பற்றிய தெளிவினைப் பெற வீடியோவைப் பார்க்கவும்.


PJ என்றழைக்கப்படும் ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கடந்த கால, இன்றைய நிலைப்பாடு குறித்த ஓர் பார்வை.
தடம் புரண்டவர்கள் யார் என்று நீண்ட பட்டியலை வெளியிட்டு தாங்கள் மட்டுமே அன்று முதல் இன்று வரை ஒரே கொள்கையில் உறுதியாக இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மவ்லவி பீ. ஜைனுல் ஆபீதீன் அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் காலஓட்டத்திற்கேற்ப எவ்வாறு தங்களது கொள்கைகளை சட்டையை மாற்றுவது போன்று மாற்றியுள்ளார்கள் என்பதனை பீ.ஜைனுல் ஆபிதீன் கடந்த காலத்தில் ஏழுதியவைகளிலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் இஸ்மாயீல் ஸலபி அவர்கள் வெளியிடுகின்றார்கள் – விரிவான விளக்கத்திற்க்கு வீடியோவை பார்வையிடவும்
வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
நாள்: 9-11-2012,
இடம்: செல்லா ராவுத்தர் திடல் சாரமேடு கோவை
நிகழ்ச்சி ஏற்பாடு: JAQH கோவை மாவட்டம்


Sunday, March 17, 2013


இன்று சகோதரர் PJ அவர்கள் தானிருந்து வந்த தவ்ஹீத் கொள்கையிலிருந்து தடம்புறண்டு தட்டுத் தடுமாறிக் கொண்டு, அன்று முதல் இன்று வரை கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கின்ற தவ்ஹீத்வாதிகளை தடம்புறண்டு விட்டதாகக் கூறிவருகின்றார்.  PJ அவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டு திரியும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலா் இலங்கையில் SLTJ (ஸ்ரீ லங்கா தவறான ஜமாஅத்) என தங்களை அறிமுகஞ் செய்து கொண்டு இருக்கின்றனர். இவர்களும் தலை கால் தெரியாமல் நாகரிகமற்ற முறையில், நக்குவார மொழியில் நக்கித் திரிகின்றனர். இவர்கள் தங்கள் தவறை உணர வேண்டும் என்பதற்காகவும், தவ்ஹீதிலிருந்து தடம்புறண்டது TNTJ , SLTJ ஆகியவைதான் நாங்களல்ல என்பதைத் தெளிவாக அறைவதற்குமாக இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகின்றது. நிதானமாக  நடுநிலையோடு சிந்திப்போருக்கு நிச்சயம் உண்மை புரியும் இன்ஷா அல்லாஹ்.

Friday, March 15, 2013

S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக் குறித்த சிந்தனை மக்களுக்கு எழுந்துள்ளது. இந்தச் சாதகமான சூழ் நிலையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பாக சில தகவல்களை மக்களுக்கு வழங்குவது விழிப்புணர்வூட்டுவதாக அமையும் என்பதால் விரிவான இந்த ஆக்கத்தை வெளியிடுகின்றோம்.
ஏற்கனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாட்டுக்குப் பெண்களை வேலைக்கு அனுப்பும் முகவர்கள் போன்றோர் நிச்சயமாக இந்த ஆக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பது எமக்குத் தெரியும். ஏற்பவர் ஏற்கலாம்ளூ எதிர்ப்பவர் எதிர்க்கலாம், போற்றுவோர் போற்றட்டும்ளூ புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற துணிவுடனேயே இதனை எழுதுகின்றோம்.
ஏற்கனவே வெளிநாடு சென்று வந்த பெண்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கம் அல்ல. வெளிநாடு செல்லும் ஆசையில் இருப்பவர்களுக்கு அந்த ஆசையை நீக்கி அதன் ஆபத்தைப் புரிய வைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். யாரையும் வேண்டுமென்றே குற்றம் சாட்டுவது எமது நோக்கம் அல்ல. பெரும்பாலும் நடக்கக் கூடிய நிலைகளைக் கூறி விழிப்புணர்வை ஊட்ட விரும்புகின்றோம்.




மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 2)

சென்ற இதழின் கவாரிஜ்கள், ஷீஆக்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகெட்ட பிரிவினர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்திருப்பது பற்றியும் மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஸஹீஹான ஹதீஸ் அறிஞர் பீஜே அவர்களால் மறுக்கப்படுவது பற்றியும் தெளிவுபடுத்தினோம்.
மரணத்தைப் பொறுத்த வரையில் சாதாரண மனிதர்களின் மரணத்திற்கும், நபிமார்களின் மரணத்திற்குமிடையில் வித்தியாசம் இருப்பதையும், நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பதையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தினோம். இந்த உண்மையை உணராமல்தான் சிலர் இந்த ஹதீஸை மறுக்கின்றனர்.

சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு


- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – 

ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

Popular Posts