.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Sunday, March 17, 2013


இன்று சகோதரர் PJ அவர்கள் தானிருந்து வந்த தவ்ஹீத் கொள்கையிலிருந்து தடம்புறண்டு தட்டுத் தடுமாறிக் கொண்டு, அன்று முதல் இன்று வரை கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கின்ற தவ்ஹீத்வாதிகளை தடம்புறண்டு விட்டதாகக் கூறிவருகின்றார்.  PJ அவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டு திரியும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலா் இலங்கையில் SLTJ (ஸ்ரீ லங்கா தவறான ஜமாஅத்) என தங்களை அறிமுகஞ் செய்து கொண்டு இருக்கின்றனர். இவர்களும் தலை கால் தெரியாமல் நாகரிகமற்ற முறையில், நக்குவார மொழியில் நக்கித் திரிகின்றனர். இவர்கள் தங்கள் தவறை உணர வேண்டும் என்பதற்காகவும், தவ்ஹீதிலிருந்து தடம்புறண்டது TNTJ , SLTJ ஆகியவைதான் நாங்களல்ல என்பதைத் தெளிவாக அறைவதற்குமாக இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகின்றது. நிதானமாக  நடுநிலையோடு சிந்திப்போருக்கு நிச்சயம் உண்மை புரியும் இன்ஷா அல்லாஹ்.


நாம் தவ்ஹீதிலிருந்து தடம்புறண்டு விட்டதாக அவர்கள் சொல்வதற்கு முன்வைக்கும் முதல் குற்றச்சாட்டு அல்குர்ஆன் அஸ்சுன்னாவுடன் ஸஹாபாக்கள் என்று மூன்றாவது ஒரு மூலாதாரத்தை நாம் எடுத்துக் கொண்டோமாம்.

இது எம்மீது வேண்டுமென்றே அள்ளி வீசுகின்ற ஒரு அபாண்டமாகும் மூன்றாவது ஒரு மூலாதாரமாக எங்களில் யாரும் ஸஹாபாக்களை சொல்லவில்லை மாறாக ஸஹாபாக்கள் பற்றிய எமது நிலைப்பாடு யாதெனில்

1. ஸஹாபாக்கள் மனிதர்கள். மனிதர்கள் என்ற வகையில் அவர்களும் தவறு விடக்கூடியவர்களே. குர்ஆன் ஹதீசுக்கு மாற்றமான ஒருவிடயம் ஸஹாபியைத் தொட்டும் வந்தால் குர்ஆன் ஹதீதையே முன்னுரிமைப் படுத்துவோம். ஸஹாபியைக் கண்டு கொள்ளமாட்டோம். அதேவேளை அந்த ஸஹாபியைத் தரக்குறைவாக விமர்சிக்கவும் மாட்டோம். மார்க்கம் தெரியாதவர், இந்த சின்ன விசயம் கூட புரியவில்லையா இவருக்கு என ஏலனம் செய்யவும் மாட்டோம்.

2. குர்ஆனுக்கும் ஹதீதுக்கும் எனக்கு ஒரு விளக்கம் தெரிகிறது. ஸஹாபாக்கள் வேறு ஒரு விளக்கத்தைச் சொல்கிறார்கள் என்றால் எமது சொந்த விளக்கத்தை விட ஸஹாபாக்களின் விளக்கத்துக்கு முன்னுரிமை கொடுப்போம்.

3. ஏதாவதொரு விஷயத்தில் ஸஹாபாக்கள் எல்லோரும் ஏகோபித்த முடிவிலிருந்தால் அந்த முடிவை முன்னுரிமை கொடுத்து ஏற்றுக்கொள்வோம். முரண்படமாட்டோம.

4. ஸஹாபாக்கள் மனிதர்கள் என்ற வகையில் சில சர்ச்சைகளை, பிரச்சினைகளை சந்தித்திருக்கிறார்கள் . இது போன்ற சந்தர்ப்பங்களில் ஸஹாபாக்களை இரு சாராரையும் ரழியல்லாஹூ அன்ஹூ எனக்கூறி பிராத்திப்போமே தவிர, பார்த்திங்களா எங்களை விட மோசமாக நடந்து கொண்டார்கள். தங்களுக்குள் வெட்டிக் கொண்டு ஒருவரையொருவர் கொலை செய்து கேவலமாக நடந்து கொண்டார்கள் என்றெல்லாம் விமர்சனம் செய்யமாட்டோம்.

இவையே அன்று முதல் இன்று வரையுள்ள,  அப்போதும் இப்போதும் நாம் பேசுகின்ற ஸஹாபாக்கள் பற்றிய எமது நிலைப்பாடாகும். இந்நிலைப்பாடு இன்று நேற்று நாம் உருவாக்கிக் கொண்டதல்ல. இன்று எம்மை தவ்ஹீதிலிருந்து தடம் புரண்டதாகப் பூச்சாண்டி காட்டுகின்ற சகோதரர் PJ அவர்களும் அன்று இந்த நிலைப்பாட்டில்தான் இருந்தார். 1986 மே அந்நஜாத் பத்திரிகையிலேயே PJ அவர்களது சகோதரர் PS அலாவுத்தீன் அவர்கள் ( அவருக்கு அல்லாஹ் அருள்புரிய வேண்டும்.) குர்ஆன் விளக்கவுரை தொடர்பாக ஓரு கட்டுரை எழுதுகின்றார். அப்போது அந்நஜாத் சஞ்சிகையின் ஆசிரியராக PJ அவர்கள் இருக்கிறார்கள்.

அக்கட்டுரையில் அவர் என்ன சொல்கிறார் என்றால்

1. குர்ஆனுக்கு குரஆனைக் கொண்டு விளக்கம் எடுக்க வேண்டும்.

2. குர்ஆனுக்கு ஹதீதைக் கொண்டு விளக்கம் எடுக்க வேண்டும்.

3.குர்ஆனிலும் ஹதீதிலும் விளக்கமில்லாத போது ஸஹாபாக்களின் விளக்கத்தைத்தான் எடுக்க வேண்டும். இஜ்திஹாத் (ஆய்வு) என்று வந்துவிட்டால் எமது விளக்கத்தை விட ஸஹாபாக்களுடைய விளக்கம்தான் மேலானது. அதிலும் குலபாஉர் ராஷிதூன்களின் விளக்கம் என்றால் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

4. ஸஹாபாக்களிடமும் விளக்கம் கிடைக்காவிட்டால் தாபியீன்களது விளக்கமே முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும.

எனக் கூறிவிட்டு, யாராவது தனது சுய விளக்கத்தை கொடுப்பாரானால் அவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்பவராவார் என்று சொல்கின்றார். இதே கருத்தைத்தான் நாங்களும் இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

1986ல் PJ உட்பட நாங்கள் எல்லோரும் என்ன கருத்தில் இருந்தோமோ அதே கருத்தில்தான் இன்றும் நாம் இருக்கின்றோம். ஆனால் PJ  தடம் புரண்டு வேறு கருத்தைச் சொல்கின்றார் என்றால் தடம்புரண்டது PJ யா? நாமா? எனச் சிந்தியுங்கள். ஸஹாபாக்கள் தேவையில்லை, அவர்களது விளக்கம் தேவையில்லை எனக் கூறிக் கொண்டு தடம்புரண்டிருப்பது யார்

ஸஹாபாக்களின் கூற்றை ஆதாரமாக எடுத்தமைக்கு கடந்தகாலங்களில் பல சான்றுகளை நாம் பார்க்க முடியும். குர்ஆன் ஹதீதை புரிந்து கொள்வதற்கு ஸஹாபாக்களின் நடத்தைகள் வார்த்தைகள் ஆதாரமாக இவர்களால் எடுக்கப்பட்டுள்ளன. 1990 மார்ச் அல்ஜன்னத் மாத இதலில், நபியவர்களின் பெயரை எழுதும் போது ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்று எழுதுகிறீர்களே!  இப்படியொரு ஸலவாத்தை நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்களா? என்று கேள்வி கேடகப்பட்டுள்ளது. அல்ஜன்னத் ஆசிரியராக இருந்த PJ அவர்கள் பதிலளிக்கும் போது, நபியவர்கள் கற்பித்தது ஸலாதுல் இப்றாஹீமிய்யாதான், எனினும் ஸஹாபாக்கள் ஹதீதை அறிவிக்கும்போது கால ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் என்று அறிவிக்கிறார்கள் இதனடிப்படையில்தான் நாமும் அவ்வாறு எழுதுகிறோம் என அன்று ஸஹாபாக்களின் செயல்பாட்டை ஆதாரமாகக் கொண்டு பதிலளித்துவிட்டு இன்று இக்கருத்தை விட்டும் பல்டி அடித்தது நீங்களா? நாங்களா?

அவ்வாறே அல்ஜன்னத் 1990 ஏப்ரல் மாத இதழில் ஒரு கேள்வி. பெரியார்கள், தங்கள்மாரிடம் பிறந்த குழந்தையை எடுத்துச்சென்று பெயர் வைப்பதில் தவறில்லையே. நபியவர்களிடம் இவ்வாறு குழந்தைகளை எடுத்துச்சென்று பெயர் வைத்ததற்கு ஆதாரம் இருக்கிறதே என்ற அடிப்படையில் கேட்கப்பட்டதற்கு பதிலளிக்கையில், ஸஹாபாக்கள் பெயர் வைக்க குழந்தையை நபியவர்களிடம் கொண்டு வந்தது சரிதான். இதை சஹாபாக்கள் எப்படிப் புரிந்துகொண்டார்கள். நபியவர்களுக்குப் பின் யாராவது அபூபக்கர், உமர் (ரழி) அவர்களிடம் குழந்தையைக் கொண்டு வந்து பெயர் வைத்தார்களா? ஸஹாபாக்கள் இதை ரசூலுல்லாஹ்வுக்கு மட்டும் உரியதாகப் புரிந்திருக்கிறார்கள். அப்படித்தான் நாமும் புரிய வேண்டும் என்ற தொனியில் எழுதியுள்ளார்.

ஸஹாபாக்களின் புரிதலைக்கூட ஆதாரமாக அன்று காட்டிவிட்டு இன்று நேர்முரணாகப் பேசிக்கொண்டு அன்றிருந்த தவ்ஹீத் கொள்கையிலிருந்து தடம்புறண்டிருப்பது PJ யா? நாங்களா?
இவ்வாறு பழைய அந்நஜாத், ஜன்னத் போன்ற மாத இதழ்களையும், PJ அவா்களது புத்தகங்களில் பழைய பதிப்புக்களையும் வாசித்தால் இன்னும் பல நூறு உதாரணங்களை நாம் கொண்டுவர முடியும். ஸஹாபாக்களின் புரிதல்கள், செயல்கள், வார்த்தைகள் என அனைத்தையும் அவ்வப்போது ஆதாரம் காட்டி விடையளித்திருப்பதையும், எழுதியிருப்பதையும் நம்மால் நிரூபிக்க முடியும்.

இவ்வாறிருந்தவா்கள் நம்மைப் பார்த்து, அன்று தவ்ஹீத் பேசியவர்கள் இன்று தவ்ஹீதை விட்டும் தடம்புரண்டு விட்டார்கள் எனப் பேசுவது நகைப்பாயிருக்கின்றது. உங்கள் பேச்சில் உண்மையாளர்களாக நீங்கள் இருந்தால், நாங்கள் அன்று ஸஹாபாக்களை ஆதாரத்துக்கு எடுத்துக் காட்டினோம். இது பிழையாகும். எனவே இப்போது அந்நிலையிலிருந்து எம்மை மாற்றிக்கொண்டோம். ஸஹாபாக்களை நாங்கள் இனி ஆதாரமாகக் காட்ட மாட்டோம். எம்மோடிருந்த JAQH, JASM போன்ற அமைப்பினர் இன்னும் அதே நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்றுதானே பேச வேண்டும். மாறாக நீங்கள் தடம்புரண்டுவிட்டு அன்றும் இன்றும் ஒரே தவ்ஹீதை உறுதியாகச் சொல்லும் எம்மைத் தடம்புரண்டு விட்டதாக பொதுமக்களிடம் பொய்யாகக் காட்ட முனைவது எங்ஙனம் நியாயமானது? எவ்வளவு தூரம் அயோக்கியத்தனமானது?

தடம்புரலள்கள் தொடரும் இன்ஷாஅல்லாஹ்……

0 கருத்துகள்:

Post a Comment

Popular Posts