.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Sunday, September 9, 2012


கற்றலின் முழுமையான பலனே கற்பித்தலில்தான் உள்ளது. கற்பித்தல் இல்லாத கற்றல் வீணானது. எனவேதான் நபி நாயகம் (ஸல்) அவர்கள் யார் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுக் கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார் கள்.

நபி (ஸல்) அவர்களை இந்த உலகிற்குத் தான் அனுப்பி வைத்ததற்கான நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது, “அவனே எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயத்தில் இருந்து ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களை கூறிக் காண்பித்து அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும்ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டில் இருந்தனர். (62:2) என்றும்,


மற்றொரு இடத்திலே “(நபியே!) உமக்கு எது இறக்கப்பட்டதோ (அந்த வேதத்தை) அதனை நீர் மக்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும் என்பதற்காகவே உம்மை நாம் அனுப்பி வைத்தோம்” என்றும் நபிகளாரின் மீது தான் சுமத்தியிருக்கும் கற்பித்தல் பணியைப் பற்றி அல்லாஹ் தெளிவாகவே விளக்குகிறான். 

கல்வி கற்ற ஒருவன் அதனை தான் மட்டும் கற்றுக் கொண்டு பிறருக்கு எடுத்துச் சொல்லாமல்கற்பிக்காமல் மறைத்து வைத்தல் மாபெரும் தவறு என்பதை நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே சுட்டிக் காட்டுகிறார்கள். எவனொருவன் (அவனுக்குத் தெரிந்த) ஞானத்தைப் பற்றி கேட்கப்பட்டும் அதனை (பிறருக்குச் சொல்லாமல்) மறைக்கிறானோ அவனுக்கு (மறுமை நாளில்) நெருப்பிலான கடிவாளங்கள் அணிவிக்கப்படும். (அபூதாவுத்திர்மிதி) என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்று கற்றலின் நோக்கமே கற்பித்தல்தான் என்பதை மிகத் தெளிவாகவே நமக்கு உணர்த்துகிறது.


அந்த வகையில் நவீன கற்பித்தல் முறைகள் குறித்து ஓர் ஆசிரியர் அறிந்திருப்பது இன்றைய காலத்தின் தேவையாகும். கற்பித்தலின் தரத்தை மேம்படுத்தல், கற்பித்தலின் விளைவாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வினைத்திறன் மிக்க கற்பித்தலை வகுப்பறையில் முன்னெடுத்தல் போன்றவற்றுக்கு நவீன வகுப்பறைக் கற்பித்தல் முறைமைகள் குறித்த அறிவு மிக மிக  இன்றியமையாததாகும்.

அவ்வாறே மறுபுறத்தில் ஓர் ஆசிரியர் கற்பித்தல் குறித்த அறிவினை விருத்தி செய்து கொள்ளாமல் தொடர்ந்தும் வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபடுவது மாணவர்களிடத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை துரிதப்படுத்தும் ஒரு காரணியாகவும் வினைத்திறனற்ற வகுப்பறைக் கற்பித்தல் காணப்படுவதாக ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்களது பெறுபேறுகளின் வீழ்ச்சி நிலைக்கும் இத்தகைய  வினைத்திறனற்ற கற்பித்தலே பெறருமளவில் தாக்கம் செலுத்துகின்றது.

ஆசிரியர் தொழில் என்பது சீரிய சமூக உருவாக்கத்தின் முதுகெலும்பாகக் காணப்படுகிறது. இந்தக் கற்பித்தலை எந்தளவுக்கு வினைத்திறனுள்ள முறையில் ஆசிரியர்கள் மேற்கொள்கிறார்கள் என்பதில்தான் அந்த சேவையின் புனிதத் தன்மையும் தங்கியுள்ளது.

வகுப்பறையில் ஆசிரியரின் பிரதான பங்கு கற்பித்தலாகும். எனவே, வகுப்பறையில் எப்படி வேண்டுமானாலும் கற்பிக்கலாம் எனும் நிலைமையிலிருந்து விடுபட்டு ஒரு பாடத்தை எந்த வழிமுறையில் முன்வைத்தால் அதன் உச்சப் பயன்பாட்டைப் பெறலாம் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும். இந்த கற்பித்தல் முறைமைகள் குறித்த நவீன திட்டமிடலுக்குத் தேவையான சில கற்பித்தல் அமைப்புக்களை இங்கே விளங்கிக் கொள்வதுடன் அவற்றை அன்றே நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள்  என்பதையும் அவதானிப்போம்.

நவீன கற்பித்தல் முறைகளை பின்வருமாறு சுருக்கமாக பார்க்கலாம்.


01.  தனியாள் கற்பித்தல் முறைகள்

       1. விரிவுரை முறை
       2. வினவுதல் முறை
       3. கலந்துரையாடல் முறை
       4. செய்து காட்டல் முறை
       5. சிந்தனைக் கிளறல் முறை
       6. நாடகமாக நடித்தல் முறை
       7. நுண்முறைக் கற்பித்தல் முறை
       8. விளையாட்டு முறை

02. குழுவாகக் கற்பிக்கும் முறை

       1.அணிமுறைக் கற்பித்தல் 
       2. போல அமைத்துக் கற்கும் முறை
       3. பிரச்சினை தீர்த்தல் முறை
       4. செயற்திட்ட முறை
       5. கண்டுபிடித்துக் கற்கும் முறை

மேற்படி கற்கும் முறைகளுள் கண்டுபிடித்துக் கற்கும் முறை பிரச்சினை தீர்த்தல் முறை, செயற்திட்ட முறை மற்றும் போல அமைத்துக் கற்கும் முறை போன்றன தனியாகவும் குழுவாகவும் கற்கும் முறைகளாகும்.

மாணவர்களின் நிலைக்கும்அறிவுக்கும் ஏற்றவாறு கற்பித்தலை அமைத்துக் கொள்ளல்

மாணவர்கள் பல்வேறுபட்ட நிலைகளில் உள்ளவராக இருக்கக் கூடும். எல்லோராலும்எல்லாவற்றையும் எப்போதும் புரிந்து கொள்ள முடியும் என்று கூற இயலாது. மாணவர்களின் நிலைக்கும்அறிவுக்கும் ஏற்பவே அவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஓர் ஆசிரியர் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார் என்பதற்காக அவரது திறமைகளை மாணவர்கள் அனைவர் மீதும் திணித்து விட முடியாது. பாத்திரத்தின் கொள்ளவுதான் கொடுக்க முடியும். பாத்திரத்தின் அளவுக்கு அதிகமாகக் கொடுத்தால் அது விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடியும்.

ஒருமுறை நாங்கள் நபி  (ஸல்) அவர்களுடன் இருந்தபோதுஒரு இளைஞர் வந்து நபிகளாரிடம், “நான் நோன்பு வைத்திருக்கும் நிலையில் என் மனைவியை முத்தமிட லாமாஎன்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். பின்னர் வயதான ஒருவர் வந்து நபிகளாரிடம் இதே கேள்வியைக் கேட்டபோதுஅவருக்கு ஆம்! முத்தமிடலாம்’ என்று அனுமதியளித்தார்கள். நாங்கள் (குழப்பத்துடன்) ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். (எங்கள் குழப்பத்தைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், ‘அந்த வயதானவரால் தன்னை (வரம்பு மீறாமல்) கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் (அதனால் தான் அவருக்கு அனுமதியளித்தேன்) என்று விளக்கமளித்தார்கள். (அஹ்மத்)

நோன்பாளியான நிலையில் மனைவியை முத்தமிடுவது கூடும் என்றாலும் கூட புதிதாக திருமணமான இளைஞருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கவில்லை. யார் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு பக்குவம் பெற்றிருக்கிறாரோ அவருக்கு மட்டுமே அனுமதியளித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் எல்லா நேரத்திலும்எல்லாச் செய்திகளையும் கூற முடியாது. மாணவர்களின் நிலைவயதுதரம்முதிர்ச்சிபுரிந்து கொள்ளும் திறன்பக்குவம் ஆகிய விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் மாணவர்களின் திறன் அறிந்து செயல்பட வேண்டும் என்ற முறையை அன்றே  நபி (ஸல்) அவர்கள் மிகச் சிறப்பாகச் சொல்லித் தந்துள்ளார்கள்.

கேள்விகள் மற்றும் விவாதங்கள் மூலமாக புரியவைத்தல்

கற்பித்தல் முறைகள் மிகச் சிறப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு சமீபகாலமாக மிக அதிகமாகவே காணப்படுகிறது. மாணவர்களை மனனம் செய்ய வைத்து பரீட்சை எழுதவைத்தல் என்ற முறை மாற்றப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. செயல்வழிக் கற்றல் என்ற பாட முறைகள் தற்போது பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டு சகலரிடையேயும் விருப்பமானதாக மாறி வருகிறது.

அல்லாஹ்வின் அருள் மறையையும்தனது அழகிய வாழ்வியல் நடைமுறைகளையும் அருமைத் தோழர்களுக்கு எடுத்து விளக்கும் போதுபல்வேறுபட்ட கற்பித்தல் முறைகளை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்த நவீன யுகத்து கண்டுபிடிப்புகள்பயிற்சி முறைகள் எல்லாமே 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபி (ஸல்) அவர்களால் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

ஓர் ஆசிரியர் தான் நடத்தும் பாடத்தை முழுமையாக மாணவர்களின் மனதில் பதிய வைப்பதற்கு பயன்படுத்த வேண்டிய பயனுள்ள முறையே வினாக்கேட்டல் மற்றும் விவாதங்கள் மூலமாகப் புரிய வைக்கும் முறையாகும். ஒருதகவலை சாதாரணமாக தெரிவிப்பதை விட அது சம்பந்தமான கேள்விகள் மற்றும் விவாதங்களை எழுப்பி அத்தகவலைத் தெரிவித்தால் அது நெஞ்சில் மறக்க முடியாதளவு பதிந்து விடும். வினாக்களையும்விவாதங்களையும் எழுப்பி சிந்தனையைக் கிளறி விடுவதே இம்முறையின் நோக்கமாகும். இம்முறையினை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. 


(ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நபித் தோழர்களை நோக்கி) ‘‘உங்களில் ஒருவரின் வீட்டின் முன்பாக ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்து அதிலே அவர் தினமும் ஐந்து வேளையும் குளித்தால் அவரது உடலில் ஏதேனும் அழுக்கு எஞ்சியிருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?’’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதை நான் செவியுற்றேன். அதற்கு நபித்தோழர்கள், ‘‘இல்லை அல்லாஹ்வின் தூதரே எந்த அழுக்குமே அவனது உடலில் ஒட்டியிருக்காது” என்று பதிலளித்தார்கள். இது போலத்தான் ஐவேளைத் தொழுகைகளும் உங்களிடம் எந்த பாவங்களும் எஞ்சியிராத வண்ணம் துடைத்தெறிந்து விடுகிறது’’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ( புகாரிமுஸ்லிம்)

‘‘ஐவேளைத் தொழுகை உங்களது பாவங்களை முழுமையாக அழித்து விடுகிறது’’ என்று சாதாரணமாகக் கூறும் போது ஏற்படும் தாக்கத்தை விடஒரு ஆற்றை உதாரணமாகக் கூறி கேள்வி கேட்டுமக்களின் சிந்தனா சக்தியைக் கிளறி விட்டுபின் அச்செய்தியை சொல்வது மனதில் ஆழமாகத் தாக்கம் செலுத்தும் என்பது திண்ணம்.

உதாரணங்களை பயன்படுத்தி விளக்குதல்


விளங்குவதற்கு கடினமான சில விஷயங்கள் கூட எளியநடைமுறையில் காணப்படக் கூடிய உதாணரங்களைக் கொண்டு விளக்கப்படும் போது சுலபமாக புரிந்து விடுகின்றது. திருக்குர்ஆன் நெடுகிலும் கூட அல்லாஹ் பல விஷயங்களை உதாரணங்கள் மூலமாக புரிய வைத்துள்ளதை நாம் காண முடிகிறது. ஒவ்வொரு விஷயத்திற்கும் சிறு சிறு உதாரணங்களைக் கொண்டு விளக்கும் ஆசிரியர்கள் சிறந்த, மாணவர்களுக்கு மிக விருப்பமான ஆசிரியர்களாக இருப்பர். வகுப்பறையும் உயிரோட்டமுள்ளதாக இருக்கும். நபி (ஸல்) அவர்களின் அணுகுமுறையில் உதாரணங்களுடன் கூடிய செய்திகளை நாம் ஏராளமாகக் காண முடிகிறது. அவைகளில் ஓரிரண்டினை நாம் காண்போம்.

ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம்ஜுஹைனா கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி வந்து, ‘‘என்னுடைய தாயார் ஹஜ்’ செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அதனை நிறைவேற்றும் முன்பே மரணமடைந்துவிட்டார். அவருக்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது என் மீது கடமையாஎன்று வினவினார். நபி (ஸல்) அவர்கள் ஆம்உங்கள் மீது அது கடமையே. உங்கள் தாயாருக்கு ஏதேனும் கடன் இருக்குமானால் அதனை நிறைவேற்றுவது உங்கள் மீது கடமையல்லவா? அது போலத்தான் இதுவும். (கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு) வேறெவரையும் விட அல்லாஹ் மிகத் தகுதியானவன் என்று பதிலளித்தார்கள். (புகாரிமுஸ்லிம்)

இச்செய்தியில்நபி (ஸல்) அவர்கள், உங்கள் தாய்க்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது உங்கள் மீது கடமை என்று மட்டும் பதிலளித்திருந்தாலே அந்தப் பெண்ணுக்கான பதில் கிடைத்திருக்கும் என்றாலும்அந்தக் கடமையின் முக்கியத்துவத்தை உணர வைப்பதற்காகஒரு உதாரணத்தைக் கூறி விளங்க வைக்கிறார்கள். இனி எக்காலத்திலும் இந்தத் தீர்வை யாருமே மறக்க முடியாத அளவுக்கான மிகச் சிறந்த ஒரு கற்பித்தலாக இது அமைந்தள்ளது.

மக்களின் அடிப்படை வாழ்வில் அவர்களோடு ஒன்றாய்க் கலந்துவிட்ட ஒன்றை அம்மக்களுக்கு உதாரணமாகக் கூறும்போது அது எளிதில் உள் வாங்கிக் கொள்ளப்படுகின்றது. “ஒருவருக்கொருவர் நேசிப்பதிலும்அக்கறை கொள்வதிலும்இரக்கம் கொள்வதிலும் முஃமின்களுக்கிடையேயான உதாரணமாவது ஓர் உடம்பைப் போன்றதாகும். உடம்பில் ஏதேனும் ஓர் உறுப்பு நோய்வாய்ப்பட்டிருந்தாலும் கூட மொத்த உடம்புமே காய்ச்சலாலும்தூக்க மின்றியும் அவதிப்படுகிறது.” (புகாரிமுஸ்லிம்) என நபி (ஸல்) முஃமின்களுக்கிடையே காணப்பட வேண்டிய பிணைப்பையும்நேசத்தையும் உதாரணம் மூலம் விளக்கினார்கள்.

மற்றுமொரு செய்தியில், “ஒரு முஃமினுக்கும் மற்றுமொரு முஃமினுக்குமான உறவுப் பிணைப்பு, ஒன்றையொன்று சார்ந்து பிணைந்திருக்கக்கூடிய (உறுதியான) கட்டிடத்தைப் போன்றதாகும்” என்று தன் விரல்களுக்கு இடையில் பிணைத்துக் காண்பித்தார்கள் என்று அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது.

இவை போன்ற அனைத்தும் உதாரணங்கள் மூலமாக செய்திகளை விளங்க வைத்தல் என்ற கற்பித்தல் முறை நபி (ஸல்) அவர்களின் அணுகுமுறைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கான ஒரு சான்றாகும். இது போன்ற ஏராளமான ஆச்சரியப்படத்தக்க அணுகுமுறைகளை நபியவர்களின் கற்பித்தலில் நாம் காண முடியும்.

போர்டுகள், வரைபடங்கள் மூலமாக விளக்குதல்


சிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்த வகுப்பறைக்குச் செல்லும் போது வரைபடங்கள் எடுத்துச் சென்று பாடங்களை விளக்குவார்கள். நேரடியாகச் சொல்லும் போது புரியவே புரியாத சில சிக்கலான விஷயங்கள் வரைபடங்கள் மூலமாக விளக்கப்படும் போது எளிதில் புரிந்து விடுகின்றது. நவீன கால யுக்தியாக நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கற்பித்தல் முறை பதிநான்கு நூற்றாண்டுக்கு முன்பே நபி (ஸல்) அவர்களால் பயன்படுத்தப்பட்டிருப்பது வியப்பிற்குரியதாகும்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களை அழைத்து மனிதவாழ்வுஅவனது தவணைக்காலம் சம்பந்தமான சில செய்திகளை பூமியில் வரைபடம் போட்டு விளக்கினார்கள்அந்த வரைபடம் இதுதான்,


நபி (ஸல்) அவர்கள் முதலில் ஒரு கோடு வரைந்தார்கள். அந்த கோடு மனிதன் என்றார்கள். பின் அந்தக் கோட்டைச் சுற்றி ஒரு கட்டம் வரைந்தார்கள். அந்த கட்டம் தான் அவனைச் சூழ்ந்திருக்கக் கூடிய தவணைக்காலம் அதாவது அஜல்’ என்றார்கள். மனிதன் என்ற கோட்டை அந்த கட்டத்திற்கு வெளியே நீட்டி வைத்துவிட்டுஅந்த நீண்ட கோடு மனிதனின் விதிக்கு மீறிய ஆசைகள் என்று குறிப்பிட்டார்கள்.

மனிதன் என்ற கோட்டிற்கு கீழாக செங்குத்தாக சில சிறிய கோடுகளை வரைந்து அவையனைத்தும் மனிதவாழ்வில் அவனுக்கு ஏற்படக்கூடிய சிறிய சிறிய இடர்கள் எனவும் ஒவ்வொன்றாக அவன் அத்தடைகளை தாண்டி வந்துதான் தன்வாழ்நாளின் இறுதி முடிவை அடைய முடியும் என்றார்கள். ஒரு தடையிலிருந்து அவன் தப்பித்து வந்துவிட்டால் கூட மற்றொன்றில் விழுந்துதான் ஆக வேண்டும். பின் அதிலிருந்து அவன் விடுபட்டு மீண்டும் வருவதுதான் வாழ்க்கை என்றார்கள்.

அதுபோல மனிதனின் சில ஆசைகள் அவனைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் விதி என்னும் வளையத்திற்கு அப்பாற்பட்டும் அமைந்து விடுவதால் அவை நிறைவேறுவதில்லை என்று மனிதவாழ்வின் தத்துவத்தை தன் தோழர்களுக்கு விளக்கினார்கள். இந்த செய்தி அஹமதுநஸயீ போன்ற கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. கற்பித்தலுக்கு பொருத்தமான சாதனங்களைப் பயன்படுத்தல் என்ற நவீனகால கற்பித்தல் முறையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நபிகளாரின் அணுகுமுறைகளில் காண முடிகின்றது.

சூழ்நிலைகளை அல்லது நடைமுறைச் சமபவங்களைப் பயன்படுத்தி கற்பித்தல்


கற்பித்தல் முறைகளில் இது முக்கியமான ஒன்றாகும். ஒரு சிறந்த ஆசிரியர் அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வைத்து மாணவர்களுக்கு சிறந்த படிப்பினைகளை வழங்கக்கூடியவராக இருக்க வேண்டும். அந்த வகையில் நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு நிகழ்ச்சியையும் பயன்படுத்தாது விட்டதில்லை. ஏட்டின் மூலம் பெறும் படிப்பறிவை விட அவர்களது வாழ்வைச் சுற்றி பிணைந்திருக்கும் விஷயங்கள் தான் பல அரிய பாடங்களை கற்றுத் தருகின்றன. 

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோதுஅங்குகாதில் துளையிடப்பட்ட ஊனமுள்ள ஆடு ஒன்று இறந்து கிடப்பதை கண்ட நபி(ஸல்) அவர்கள்தன் தோழர்களை நோக்கி, “உங்களில் யாரேனும் இந்த ஆட்டினை ஒரு திர்ஹம் விலை கொடுத்து வாங்குவீர்களாஎன்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள்இல்லை அல்லாஹ்வின் தூதரே. இந்த ஆடு உயிரோடு இருந்தால் கூட இதனை நாங்கள் விலை கொடுத்து வாங்கமாட்டோம் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “தோழர்களே! எப்படி உங்களது பார்வையில் இந்த ஆடு ஒரு மதிப்பற்ற ஒன்றோ அது போலத்தான் அல்லாஹ்வின் பார்வையில் இந்த உலகம் இந்த ஆட்டைவிட மிக அற்பமானது” என்று கூறினார்கள். (முஸ்லிம்)

இந்த உலகம் அற்பமானது என்பதை தன் தோழர்களுக்குக் கூறுவதற்காக கடைவீதிக்கு செல்லவில்லை. எதோ்ச்சையாக கடைவீதிக்கு சென்றபோதுஇறந்துகிடக்கும் ஊனமுற்ற ஆட்டினை காண்கிறார்கள். அந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி அழகானதொரு பாடத்தை தன் தோழர்களுக்கு கற்பிக்கிறார்கள். 

இவ்வாறே உமர் இப்னுல் கத்தாப் (ரழி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு செய்தியையும் புகாரியில் காணலாம். மக்கா வெற்றியின் போதுஅல்லது ஒரு போர்க்களத்தில் எதிர் முகாமிலிருந்து சிறை பிடிக்கப்பட்ட சில பெண்களைப் பார்த்தோம். அவர்களில் ஒரு பெண் பாலூட்டும் பருவத்திலுள்ள தனது பச்சிளங் குழந்தையை தொலைத்துட்டு நீண்ட நேரம் தேடி நிராசையாகிவிட்டாள். பின்னர் அக்குழந்தையை கண்டு பிடித்ததும் அதனை தாவியணைத்து கண்ணீர் மல்க கட்டித் தழுவி அக்குழந்தைக்கு பால் கொடுக்கத் துவங்கினாள்.

அத்தாயின் பரிதவிப்பையும்அக்குழந்தையின் மீது அவள் கொண்ட பாசத்தையும் கண்டு நாங்கள் நெகிழ்ந்து போய் நின்றோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களை நோக்கிஇந்த தாய் தனது இக்குழந்தையை நெருப்பிலே உயிரோடு வீசி எரித்து விடுவாள் என்று உங்களால் கற்பனை செய்ய இயலுமாஎன்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! இல்லை! ஒருபோதும் அப்பெண் அவ்வாறு செய்யமாட்டாள்மாறாக எப்போதும் தன் குழந்தையை பாதுகாக்கக் கூடியவளாகவே அவள் இருப்பாள் என்று நாங்கள் பதிலுரைத்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இந்தத் தாய் தன் குழந்தை மீது கொண்ட நேசத்தையும்கருணையையும் விட நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிக்க கருணையுடையவன்” எனச் சொன்னார்கள்.

இவ்வாறு நவீன காலத்தில் பயிற்சியளிக்கப்படும் கற்பித்தல் அணுகுமுறைகள் நபிகளாரால் அன்றே அழகிய முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் அறிய முடிகிறது. இன்றைய நவீன கற்பித்தல் முறை, யுக்திகள் அனைத்தும் நபி (ஸல்) அவர்களால் பிரயோகிக்கப்பட்டுள்ளமைக்கு ஏராளமான சான்றாதாரங்களை நாம் காணலாம். விரிவுரை முறை, உவமைகள் மூலம் கருத்துக்களை விளக்குதல் போன்ற இன்னோரன்ன அனைத்து முறைகளையும் நபியவர்களின் ஸீராவில் நாம் காணலாம். அரசியல் தலைவராய்ஆன்மீகத் தலைவராய்குடும்பத் தலைவராய்நல்ல தந்தையாய்நல்ல நண்பராய் திகழ்ந்த அவர்கள் மிகச் சிறந்த ஆசிரியராகவும் திகழ்ந்துள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.

0 கருத்துகள்:

Post a Comment

Popular Posts