.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Saturday, July 20, 2013

அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 

இஸ்லாமியப் பெண்களுக்கு இபாதத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிலும் குறிப்பாக நோன்பு நோற்பதில் அளப்பரிய அக்கறை உண்டு. ரமழானுக்கு முன்னரே இல்லங்களைக் கழுவி தூய்மைப்படுத்தி, நோன்பிற்கும் அதனோடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் தம்மைத் தயார் படுத்திக் கொள்வர். இத்தகைய சகோதரிகளுக்காக நோன்பு நோற்பதுடன் தொடர்புபட்ட சில சட்டங்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன்.

(ஒரு வரலாற்றுத் துரோகம் வெளிவருகிறது)

M S. ரஹ்மத்துல்லாஹ்                                         
கேள்வி:
ஸாலிம்(ரழி) அவர்களுக்கு ஸஹ்லா(ரழி) அவர்கள் பால் கொடுத்தார்கள் என்று ஹதீஸ் கூறுகின்றது. இந்த ஹதீஸை மறுப்பவர்கள் பின்வருமாறு வாதிக்கின்றனர். ஒரு பெண்ணின் மார்பகத்தில் பால் வரவேண்டும் என்றால் அவளுக்கு சிறு குழந்தை இருக்க வேண்டும். ஸாலிம்(ரழி) அவர்களுக்கு பால் புகட்டும் போது ஸஹ்லா(ரழி) அவர்களுக்குக் கைக்குழந்தை இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. கைக்குழந்தை இல்லாத போது அவர்கள் எப்படி பால் கொடுத்தார்கள்?
இந்த வாதத்தின் உண்மை நிலை என்ன? இதற்கான தெளிவை உண்மை உதயத்தின் மூலமாக எதிர்பார்க்கின்றேன்.

Saturday, June 15, 2013

இன்று SLTJ என்ற ஒரு சிறு கூட்டம் பிஜே அவர்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டு இலங்கை மக்களையும் வழிகேட்டின் பால் அழைத்துக் கொண்டிருக்கின்றனா். சூனியம் பற்றிய தெளிவின்மையே இச்சிறு குழுவின் வழிகேட்டுக்கு முக்கிய காரணமாகும். அல்குர்ஆன் சுன்னாவின் ஒளியில் சூனியம் பற்றிய ஐயங்களுக்கு பதிலளிக்கும் பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றினை இன்று 15.06.2013 சனிக்கிழமை மாலை 4.00 மணி தொடக்கம் மாளிகைக்காடு அல்ஹூசைன் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற முழுமையான ஏற்பாடுகள் சாய்ந்தமருது அல்இஸ்லாஹ் ஜூம்ஆ பள்ளிவாசலினால் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத் தெளிவுக்கு சரியானதோர் சந்தா்ப்பம். சந்தா்ப்பத்தைத் தவறவிடாதீா்கள். ஐயங்களுக்கான தெளிவினை வழங்குகின்றார் உண்மை உதய இஸ்லாமிய சஞ்சிகையின் ஆசிரியா் அஷ்ஷெய்க் SHM. இஸ்மாயீல் ஸலபி அவா்கள்.

Tuesday, April 16, 2013

இன்று SLTJ என்ற ஒரு சிறு கூட்டம் பிஜே அவர்களை கண்மூடிப் பின்பற்றிக் கொண்டு இலங்கை மக்களையும் வழிகேட்டின் பால் அழைத்துக் கொண்டிருக்கின்றனா். சூனியம் பற்றிய தெளிவின்மையே இச்சிறு குழுவின் வழிகேட்டுக்குக் காரணமாகும். எனவே சூனியம் பற்றிய தெளிவினைப் பெற வீடியோவைப் பார்க்கவும்.


PJ என்றழைக்கப்படும் ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கடந்த கால, இன்றைய நிலைப்பாடு குறித்த ஓர் பார்வை.
தடம் புரண்டவர்கள் யார் என்று நீண்ட பட்டியலை வெளியிட்டு தாங்கள் மட்டுமே அன்று முதல் இன்று வரை ஒரே கொள்கையில் உறுதியாக இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மவ்லவி பீ. ஜைனுல் ஆபீதீன் அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் காலஓட்டத்திற்கேற்ப எவ்வாறு தங்களது கொள்கைகளை சட்டையை மாற்றுவது போன்று மாற்றியுள்ளார்கள் என்பதனை பீ.ஜைனுல் ஆபிதீன் கடந்த காலத்தில் ஏழுதியவைகளிலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் இஸ்மாயீல் ஸலபி அவர்கள் வெளியிடுகின்றார்கள் – விரிவான விளக்கத்திற்க்கு வீடியோவை பார்வையிடவும்
வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
நாள்: 9-11-2012,
இடம்: செல்லா ராவுத்தர் திடல் சாரமேடு கோவை
நிகழ்ச்சி ஏற்பாடு: JAQH கோவை மாவட்டம்


Sunday, March 17, 2013


இன்று சகோதரர் PJ அவர்கள் தானிருந்து வந்த தவ்ஹீத் கொள்கையிலிருந்து தடம்புறண்டு தட்டுத் தடுமாறிக் கொண்டு, அன்று முதல் இன்று வரை கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கின்ற தவ்ஹீத்வாதிகளை தடம்புறண்டு விட்டதாகக் கூறிவருகின்றார்.  PJ அவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டு திரியும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலா் இலங்கையில் SLTJ (ஸ்ரீ லங்கா தவறான ஜமாஅத்) என தங்களை அறிமுகஞ் செய்து கொண்டு இருக்கின்றனர். இவர்களும் தலை கால் தெரியாமல் நாகரிகமற்ற முறையில், நக்குவார மொழியில் நக்கித் திரிகின்றனர். இவர்கள் தங்கள் தவறை உணர வேண்டும் என்பதற்காகவும், தவ்ஹீதிலிருந்து தடம்புறண்டது TNTJ , SLTJ ஆகியவைதான் நாங்களல்ல என்பதைத் தெளிவாக அறைவதற்குமாக இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகின்றது. நிதானமாக  நடுநிலையோடு சிந்திப்போருக்கு நிச்சயம் உண்மை புரியும் இன்ஷா அல்லாஹ்.

Friday, March 15, 2013

S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக் குறித்த சிந்தனை மக்களுக்கு எழுந்துள்ளது. இந்தச் சாதகமான சூழ் நிலையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பாக சில தகவல்களை மக்களுக்கு வழங்குவது விழிப்புணர்வூட்டுவதாக அமையும் என்பதால் விரிவான இந்த ஆக்கத்தை வெளியிடுகின்றோம்.
ஏற்கனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாட்டுக்குப் பெண்களை வேலைக்கு அனுப்பும் முகவர்கள் போன்றோர் நிச்சயமாக இந்த ஆக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பது எமக்குத் தெரியும். ஏற்பவர் ஏற்கலாம்ளூ எதிர்ப்பவர் எதிர்க்கலாம், போற்றுவோர் போற்றட்டும்ளூ புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற துணிவுடனேயே இதனை எழுதுகின்றோம்.
ஏற்கனவே வெளிநாடு சென்று வந்த பெண்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கம் அல்ல. வெளிநாடு செல்லும் ஆசையில் இருப்பவர்களுக்கு அந்த ஆசையை நீக்கி அதன் ஆபத்தைப் புரிய வைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். யாரையும் வேண்டுமென்றே குற்றம் சாட்டுவது எமது நோக்கம் அல்ல. பெரும்பாலும் நடக்கக் கூடிய நிலைகளைக் கூறி விழிப்புணர்வை ஊட்ட விரும்புகின்றோம்.




மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 2)

சென்ற இதழின் கவாரிஜ்கள், ஷீஆக்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகெட்ட பிரிவினர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்திருப்பது பற்றியும் மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஸஹீஹான ஹதீஸ் அறிஞர் பீஜே அவர்களால் மறுக்கப்படுவது பற்றியும் தெளிவுபடுத்தினோம்.
மரணத்தைப் பொறுத்த வரையில் சாதாரண மனிதர்களின் மரணத்திற்கும், நபிமார்களின் மரணத்திற்குமிடையில் வித்தியாசம் இருப்பதையும், நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பதையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தினோம். இந்த உண்மையை உணராமல்தான் சிலர் இந்த ஹதீஸை மறுக்கின்றனர்.

சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு


- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – 

ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

Wednesday, December 12, 2012

அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலையின் இரு விரிவுரையாளர்கள் கடந்த 28.11.2012ல் பிரியாவிடை பெற்றுச் சென்றனர். அவர்களது பிரியாவிடை வைபவம் கலாபீட மண்டபத்தில் வெகு விமர்சையாக நடந்தேரியது. கலாபீடத்தின் மாணவப் பேரவையும், விரிவுரையாளர் குழாமும் இவ்விழாவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
உடற்கல்வி விரிவுரையாளரான ஜனாப். எஸ்.எம். அப்துல் ஜிப்ரி (B.A. Hon.,Sp.ph.Ed), விஞ்ஞான விரிவுரையாளரான ஜனாப் M.I.M. அஹ்மட் ஹூஸைன் (Bsc.,Msc.,PGDE.,MED.) ஆகிய இரு விரிவுரையாளர்களுக்குமே இப்பிரியாவிடை வைபவம் நடந்தேறியது.
அல்லாஹ்வின் படைப்புக்களான மலக்குகள், மனிதர்கள், ஜின்கள்ஷைத்தான்கள்

அல்லாஹ் தன் விருப்பத்திற்கமைய தனது படைப்பை பற்பல நிலைகளிலும் கோணங்களிலும் படைத்துள்ளான். அவ்வாறு சிருஷ்டிக்கப்பட்ட படைப்பினங்களை நாம் பின்வரும் ஐந்து பெரும் பிரிவுகளாக வகுக்க முடியும்
 1.     மலக்குகள்
       2.   மனிதர்கள்
       3.  ஜின்கள்
       4.  இவ்வுலகில் உள்ள ஏனைய உயிரினங்கள்
       5.  உயிரற்ற பொருட்கள்
இங்கு நாம் மலக்குகள் பற்றி அவதானிப்போம்.

Saturday, October 27, 2012

இன்று 27. 10. 2012 சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு புனித ( ஈதுல் அழ்ஹா) ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை சாய்ந்தமருது அல்-இஸ்லாஹ் ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் கடற்கரை வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட அல்இஸ்லாஹ் திடலில் நடைபெற்றது. ஆண்களும் பெண்களுமாக பெரும் திரளான மக்கள் இத்தொழுகையில் பங்கு கொண்டனர். திடல் போதாமலாகி விடுமளவு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பெருநாள் தொழுகையில் பங்கு கொண்டமை கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது மட்டுமல்ல நபிவழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற மக்கள்

Saturday, October 20, 2012



(ஈதுல் அழ்ஹா) புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் 27.10.2012 சனிக்கிழமை சரியாக காலை 6.30 மணிக்கு சாய்ந்தமருது, கடற்கரை வீதி (பெண்கள் சந்தைக்கு அண்மையில் அமைந்துள்ள) கடற்கரை மைதானத்தில் சாய்ந்தமருது அல்-இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. சகல பொதுமக்களும் (ஆண்களும் பெண்களும்) வுழூச் செய்து கொண்டு நேரகாலத்தோடு முஸல்லாவுடன் சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பெருநாள் தொழுகைக்கு முன்னால் யாரும் தங்களது உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுத்துவிட வேண்டாம் என்பதையும் ஞாபகப்படுத்துவதுடன், சாய்ந்தமரு தவ்ஹீத் ஜமாஅத்  (அல்-இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல்) கூட்டு உழ்ஹிய்யாவுக்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளது. விரும்புகின்ற சகோதரர்கள் இதிலும் பங்கெடுத்துக்கொள்ள முடியும். கூட்டு உழ்ஹிய்யா தொடர்பான விபரங்கள் தேவைப்படுவோர் 0777156179 / 0773672830 / 0773413653 / 0754283929 ஆகிய தொலைபேசி இலக்கங்களைத் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் நபிவழியில் எமது கிரியைகளை நிறைவேற்றிட அனைவரும் உறுதி பூணுவோம்.

Saturday, October 13, 2012





11.10.2012 வியாழக்கிழமை பகல் 1.30 மணியளவில் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் முச்சக்கர வண்டியொன்று முன்னால் இடப்பக்கமாகத் திரும்பிய காரில் மோதுண்டு குடை புறண்டது. இறையருளால் சாரதியும் பயணிகளும் உயிர் தப்பினர். முச்சக்கர வண்டியில் பயணித்த 3 பெண்களும் ஒரு குழந்தையும் காயமுற்று அக்கறைப்பற்று வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக அக்கறைப்பற்று பொலிசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். வாகனத்தின் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

Popular Posts