.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Saturday, August 18, 2012


             ஜம்இய்யது அன்சாரிஸ் சுன்னத்தில் முகம்மதிய்யாவி (JASM) ன் சமூகப்பணித் தொடரில் 18.08.2012 சனிக்கிழமை அன்று உலர் உணவு விநியோகிக்கப்பட்டது. கடந்த சுனாமியால் முழுமை யாகப் பாதிக்கப்பட்டு இது வரை வீடுகள் எவராலும் வழங்கப்படாத நிலையில் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலின் பின்னால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் சுமார் 8 வருடங்களாக பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கே புனித நோன்புப் பெருநாளை சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு 1500 ரூபா பெருமதியான இவ்உணவுப் பார்சல்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்து லில்லாஹ்.

Monday, August 6, 2012

(ஈதுல் பித்ர்) புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்ஷா அல்லாஹ் சரியாக காலை 6.30 மணிக்கு சாய்ந்தமருது, கடற்கரை வீதி கமு றியாழுல் ஜன்னா வித்தியாலய முன்பாக அமைந்துள்ள கடற்கரை மைதானத்தில் சாய்ந்தமருது அல்-இஸ்லாஹ் ஜூம்ஆப் பள்ளிவாசல் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. சகல பொதுமக்களும் (ஆண்களும் பெண்களும்) வுழூச் செய்து கொண்டு நேரகாலத்தோடு முஸல்லாவுடன் சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முகம்மதிய்யா கல்முனைக் கிளை (முகம்மதி ஜூம்ஆப் பள்ளிவாசல்) ஏற்பாட்டில் கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஜமாஅத் திடலில் இன்ஷா அல்லாஹ் காலை 6.45 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நபிவழியில் எமது பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிட அனைவரும் ஒன்று குழுமுவோம்.

Saturday, August 4, 2012

அண்ணன் பிஜேயின் தவறான வாதங்கள் அவ்வப்போது பலராலும் ஆதார பூர்வமாக எழுதப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதே விடயங்களை அலாதியாக நானும் எழுத வேண்டிய தேவை கிடையாது. SLTJ கல்முனை என்ற கும்பல் கல்முனை JASM பற்றி விட்ட கதையளப்புகளையும் பொய்யையும் வெளிக்காட்டுவதே நமது நோக்கமாகும். யார் எதைச் சொன்ன போதிலும் சரியே. அல்குர்ஆனுக்கு ஆதார பூர்வமான ஹதீஸ் ஒரு போதும் முரண்படாது அது முரண்பாடாக நமக்கு தோன்றினாலும் கூட என்பவை பற்றி நிறையவே எழுதப்பட்டுள்ளது.

Friday, August 3, 2012


அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-3)

அஷ்ஷெய்க S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
குர்ஆன், சுன்னா இரண்டுமே வஹி எனும் வேத வெளிப்பாடு. இரண்டும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்டவையே. எனவே இரண்டுக்குமிடையில் முரண்பாடு இருப்பது போல் தோன்றினால் நமது அறிவில்தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். ஹதீஸில் ஒரு நாளும் கோளாறு இருக்காது. நாம் புரிந்து கொண்டதில் எங்கோ ஒரு இடத்தில் தவறு விட்டிருப்போம். எனவே, குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் முரண்படுவது போல் தோன்றினால் இரண்டுக்குமிடையில் இணக்கம் காண முயற்சிக்க வேண்டும். முடியாமல் போனால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. எனவே, இரண்டையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என நம்ப வேண்டும்.

அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-1)

அஷ்ஷெய்க S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
 அல் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். இவை இரண்டும் அல்லாஹ்விடமிருந்து வந்த வேத வெளிப்பாடு (வஹி)யாகும். இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் போது அவற்றுக்கிடையே முரண்பாடிருக்க வாய்ப்பேயில்லை. முரண்பாடுஇருப்பதாகத் தோன்றினால் நாம் புரிந்து கொண்டதில்தான் எங்கோ தவறு விட்டிருப்போமே தவிர குர்ஆனிலோ, ஸஹீஹான ஹதீஸிலோ எந்தக் குறைபாடும் இருக்காது. இருக்க வாய்ப்பும் இல்லை. இதுதான் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் நிலைப்பாடாகும்.

அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-2)

அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
அல் குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை. அப்படிமுரண்பாடுகள் இருந்தால் அது இறை வேதமாகவும் இருக்க முடியாது என அல் குர்ஆனே கூறியுள்ளது. அல் குர்ஆனில் சில வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்போல் தோன்றுகின்றன. அவற்றை ஆழமாக அவதானித்துப் பார்த்தால் அவற்றுக்கிடையேமுரண்பாடு இல்லையென்பதை உணர்ந்து கொள்ளலாம். அப்படி உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் இரண்டும் என் இரட்சகனிடமிருந்து வந்தவை என்று ஈமான் கொள்ள வேண்டும்.

Thursday, August 2, 2012

சாய்ந்தமருது அல்மஸ்ஜிதுஸ் ஷரீப் பள்ளிவாசலில் பிரதி சனிக்கிழமை தோறும் அஸர்த் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்று வந்த பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி ரமழான் முடியும் வரை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகின்றது. அவ்வாறே பெண்களின் மார்க்க சம்பந்தமான சந்தேகங்கள் கேள்விப் பெட்டி மூலம் பெறப்பட்டு இரவுத் தொழுகையின் பின் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விளக்கம் அளிக்கப்படுகின்றது. இரவுத்  தொழுகையின் போது பெண்கள் பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேள்விப் பெட்டியினுள் உங்களது மார்க்க சம்பந்தமான சந்தேகங்களையும் நீங்கள் எழுதிப் போட்டு இஸ்லாமிய விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Popular Posts