.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Tuesday, September 11, 2012


மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலபி

ஹதீஸில் முரண்பாடா?

‘நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது’ என்ற ஆதாரபூர்வமான அறிவிப்பை ‘அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது’ என்று கூறி, சகோதரர் மறுத்து வருகின்றார். இவர் கூறும் காரணம் தவறானது என்பதை இதுவரை நாம் ஆராய்ந்தோம். ‘குறித்த இந்த ஹதீஸிற்குள்ளேயே முரண்பாடு இருக்கின்றது’ என்ற மற்றுமொரு வாதத்தையும் இந்த ஹதீஸை மறுப்பதற்குத் துணையாக முன்வைக்கின்றார்.

Monday, September 10, 2012


மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலபி

முஹம்மத்(ஸல்) சூனியம் செய்யப்பட்டவர்?’
இஸ்லாத்தின் எதிரிகள் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர் – சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சித்துள்ளனர். அப்படி விமர்சித்தவர்களைக் குர்ஆன் அநியாயக்காரர்கள் என்று கூறுகின்றது. இதன் மூலம் அவர்களது விமர்சனம் அல்லாஹ்வால் மறுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஹதீஸ் கூறுகின்றது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தோரணையில் வாதித்து சகோதரர் ஹதீஸை மறுக்கின்றார்.

இந்த வாதம் தவறானதாகும். இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் சகோதரர் தனக்குத் தானே முரண்படுகின்றார்.

Sunday, September 9, 2012


கற்றலின் முழுமையான பலனே கற்பித்தலில்தான் உள்ளது. கற்பித்தல் இல்லாத கற்றல் வீணானது. எனவேதான் நபி நாயகம் (ஸல்) அவர்கள் யார் குர்ஆனை தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுக் கிறாரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று கூறினார் கள்.

நபி (ஸல்) அவர்களை இந்த உலகிற்குத் தான் அனுப்பி வைத்ததற்கான நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது, “அவனே எழுதப் படிக்கத் தெரியாத சமுதாயத்தில் இருந்து ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களை கூறிக் காண்பித்து அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும்ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டில் இருந்தனர். (62:2) என்றும்,

Saturday, September 8, 2012





 அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டிருந்தால் அதைக் காபிர்கள் விமர்சனம் செய்திருப்பார்கள். அப்படி விமர்சனம் செய்ததாக எந்தத் தகவல்களும் இல்லை. எனவே, விமர்சனம் இல்லை என்பதே நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்பதற்கான சான்றாகத் திகழ்கின்றது என்ற அடிப்படையில் சகோதரர் நபியவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாகக் கூறும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை மறுக்கின்றார்.
உள்ளதை வைத்து விமர்சனம் செய்வதுதான் நியாயமான விமர்சனமாகும். ஆனால், அவர் இந்த வாதத்தை பல்வேறுபட்ட மிகைப்படுத்தல்கள் செய்து ஹதீஸில் கூறப்படாத செய்திகளை மேலதிகமாக இணைத்தே வலுப்படுத்த முனைகிறார்.


அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

பாதுகாக்கப்பட்ட இறைவேதம்
நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை ஏற்றுக்கொண்டால் குர்ஆனின் நம்பகத் தன்மையில் அது சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்ற வாதத்தை முன்வைத்து பிஜே அவர்கள் அது பற்றிய ஸஹீஹான ஹதீஸை மறுக்கின்றார். அவர் முன்வைக்கும் வாதத்தின் போலித் தன்மையையும், அவர் தனக்குத் தானே முரண்படும் விதத்தையும், தனது வாதத்தை நிலைநிறுத்துவதற்காக ஹதீஸில் கூறப்பட்டதற்கு மாற்றமாக மிகைப்படுத்தும் அவரது போக்கையும், குர்ஆன் தொகுப்பு வரலாற்றில் குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வண்ணம் அவர் கூறியுள்ள கருத்துக்கள் பற்றியும் இந்தத் தொடரில் விரிவாக அலசுவோம்.
பிஜே தர்ஜமா: பக்கம்-1296

Popular Posts