.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Sunday, March 17, 2013


இன்று சகோதரர் PJ அவர்கள் தானிருந்து வந்த தவ்ஹீத் கொள்கையிலிருந்து தடம்புறண்டு தட்டுத் தடுமாறிக் கொண்டு, அன்று முதல் இன்று வரை கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்கின்ற தவ்ஹீத்வாதிகளை தடம்புறண்டு விட்டதாகக் கூறிவருகின்றார்.  PJ அவர்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றிக் கொண்டு திரியும் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலா் இலங்கையில் SLTJ (ஸ்ரீ லங்கா தவறான ஜமாஅத்) என தங்களை அறிமுகஞ் செய்து கொண்டு இருக்கின்றனர். இவர்களும் தலை கால் தெரியாமல் நாகரிகமற்ற முறையில், நக்குவார மொழியில் நக்கித் திரிகின்றனர். இவர்கள் தங்கள் தவறை உணர வேண்டும் என்பதற்காகவும், தவ்ஹீதிலிருந்து தடம்புறண்டது TNTJ , SLTJ ஆகியவைதான் நாங்களல்ல என்பதைத் தெளிவாக அறைவதற்குமாக இக்கட்டுரை இங்கு வெளியிடப்படுகின்றது. நிதானமாக  நடுநிலையோடு சிந்திப்போருக்கு நிச்சயம் உண்மை புரியும் இன்ஷா அல்லாஹ்.

Friday, March 15, 2013

S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையைத் தொடர்ந்து வெளிநாட்டு வேலை வாய்ப்புக் குறித்த சிந்தனை மக்களுக்கு எழுந்துள்ளது. இந்தச் சாதகமான சூழ் நிலையைக் கருத்திற் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புத் தொடர்பாக சில தகவல்களை மக்களுக்கு வழங்குவது விழிப்புணர்வூட்டுவதாக அமையும் என்பதால் விரிவான இந்த ஆக்கத்தை வெளியிடுகின்றோம்.
ஏற்கனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாட்டுக்குப் பெண்களை வேலைக்கு அனுப்பும் முகவர்கள் போன்றோர் நிச்சயமாக இந்த ஆக்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்பது எமக்குத் தெரியும். ஏற்பவர் ஏற்கலாம்ளூ எதிர்ப்பவர் எதிர்க்கலாம், போற்றுவோர் போற்றட்டும்ளூ புழுதி வாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற துணிவுடனேயே இதனை எழுதுகின்றோம்.
ஏற்கனவே வெளிநாடு சென்று வந்த பெண்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்பது எமது நோக்கம் அல்ல. வெளிநாடு செல்லும் ஆசையில் இருப்பவர்களுக்கு அந்த ஆசையை நீக்கி அதன் ஆபத்தைப் புரிய வைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். யாரையும் வேண்டுமென்றே குற்றம் சாட்டுவது எமது நோக்கம் அல்ல. பெரும்பாலும் நடக்கக் கூடிய நிலைகளைக் கூறி விழிப்புணர்வை ஊட்ட விரும்புகின்றோம்.




மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (பகுதி 2, தொடர் 2)

சென்ற இதழின் கவாரிஜ்கள், ஷீஆக்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகெட்ட பிரிவினர் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி ஹதீஸ்களை மறுத்திருப்பது பற்றியும் மூஸா நபியும், மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஸஹீஹான ஹதீஸ் அறிஞர் பீஜே அவர்களால் மறுக்கப்படுவது பற்றியும் தெளிவுபடுத்தினோம்.
மரணத்தைப் பொறுத்த வரையில் சாதாரண மனிதர்களின் மரணத்திற்கும், நபிமார்களின் மரணத்திற்குமிடையில் வித்தியாசம் இருப்பதையும், நபிமார்கள் மரணத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பதையும் ஆதாரத்துடன் தெளிவுபடுத்தினோம். இந்த உண்மையை உணராமல்தான் சிலர் இந்த ஹதீஸை மறுக்கின்றனர்.

சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு


- S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – 

ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ்
இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர்.

Popular Posts