.


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹ், உங்கள் வருகை வரவேற்புக்குரியது

Saturday, July 20, 2013


(ஒரு வரலாற்றுத் துரோகம் வெளிவருகிறது)

M S. ரஹ்மத்துல்லாஹ்                                         
கேள்வி:
ஸாலிம்(ரழி) அவர்களுக்கு ஸஹ்லா(ரழி) அவர்கள் பால் கொடுத்தார்கள் என்று ஹதீஸ் கூறுகின்றது. இந்த ஹதீஸை மறுப்பவர்கள் பின்வருமாறு வாதிக்கின்றனர். ஒரு பெண்ணின் மார்பகத்தில் பால் வரவேண்டும் என்றால் அவளுக்கு சிறு குழந்தை இருக்க வேண்டும். ஸாலிம்(ரழி) அவர்களுக்கு பால் புகட்டும் போது ஸஹ்லா(ரழி) அவர்களுக்குக் கைக்குழந்தை இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. கைக்குழந்தை இல்லாத போது அவர்கள் எப்படி பால் கொடுத்தார்கள்?
இந்த வாதத்தின் உண்மை நிலை என்ன? இதற்கான தெளிவை உண்மை உதயத்தின் மூலமாக எதிர்பார்க்கின்றேன்.


பதில்: 
தவ்ஹீத் பேசக்கூடிய இளம் சகோதரர்களது சிந்தனைகள் மிக மோசமாக சிதறடிக்கப்பட்டு வருவதால் இது குறித்து விரிவாகவே விளக்கலாம் என்று நினைக்கின்றேன் இன்ஷாஅல்லாஹ்.
ஒரு சம்பவத்தைப் புரிந்து கொள்ளும் போது அந்த சம்பவத்திலிருந்து முறையாக சிந்திக்கத் தெரிந்திருக்க வேண்டும். தனது தப்பான முடிவை மாற்றிக்கொள்ளாமல் ஹதீஸை மறுப்பதற்கு ஏதாவது வாதம் செய்ய வேண்டும் என்ற வழி தவறிய சிந்தனையின் அடிப்படையில் கேள்விகளைத் தொடுப்பது ஹதீஸை அணுகும் முறையல்ல.

அந்த நபிமொழி வருமாறு: ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது: அபூஹுதைஃபாவின் அடிமை(யும் வளர்ப்பு மகனுமான) ஸாலிம்(ரலி) அவர்கள் அபூஹுதைஃபா மற்றும் அவருடைய மனைவியுடன் அவர்களது வீட்டில் இருந்து வந்தார். அப்போது (அபூஹுதைஃபாவின் மனைவிசஹ்லா) பின்த் சுஹைல்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ஸாலிம்  பருவ வயதை அடைந்துவிட்டார். மற்ற ஆண்கள் அறிவதை அவரும் அறிகிறார். இந்நிலையில் அவர் எங்கள் வீட்டிற்குள் வருகிறார். இதனால் (அவர் என்னைத் திரையின்றி பார்க்க நேரிடும் என்பதால் என் கணவர்) அபூ ஹுதைஃபாவின் மனத்தில் அதிருப்தி நிலவுகிறது என்று நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் சஹ்லாவிடம் ''நீ அவருக்குப் பால் கொடுத்துவிடு, இதனால் அவருக்குச் செவிலித்தாய் ஆகிவிடுவாய். (உன்னுடைய கணவர்) அபூ ஹுதைஃபாவின் மனத்தில் நிலவும் அதிருப்தியும் மறைந்து விடும்'' என்று கூறினார்கள். மீண்டும் அவர் (திரும்பிச் சென்று)  நபி(ஸல்) அவர்களிடம், நான் அவருக்குப் பால் கொடுத்து விட்டேன். இதனால் என் கணவர் அபூஹுதைஃபாவின் மனத்தில் நிலவிய அதிருப்தியும் மறைந்துவிட்டது''என்று கூறினார்.              (நூல் : முஸ்லிம் 2878, 2879, 2880)
குறித்த ஹதீஸில் ஸாலிம்(ரழி) அவர்களுக்குப் பால் கொடுத்தார்கள் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. அப்படியென்றால் அவர்களுக்கு அந்த சந்தர்ப்பத்தில் வேறு குழந்தை இருந்திருக்கின்றது என்றுதானே அர்த்தம்!

நபி(ஸல்) அவர்கள் பாலூட்டச் சொன்னபோது ஸாலிம் வளர்ந்து வாலிபராகி விட்டாரே என ஸஹ்லா(ரழி) அவர்கள் கேட்கின்றார்கள். அந்த சந்தர்ப்பத்தில் ஸஹ்லா(ரழி) அவர்களிடம் கைக்குழந்தை இல்லையென்றால் என்னிடத்தில் பால் கொடுக்கமுடியாத நிலையிருக்கும் போது நான் எப்படிப் பால் கொடுப்பது என்றல்லவா கேட்டிருப்பார்கள்?

'நீ பால் கொடு' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் என்றால் ஸஹ்லா(ரழி) அவர்கள் பால் கொடுக்கக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள் என்பதை நபி(ச) அறிந்துதான் சொல்லியிருக்கிறார்கள் என்று தானே புரிந்து கொள்ள வேண்டும்? (அல்லாஹ்வின் தூதருக்கு இதுகூடவா தெரியாமல் இருந்திருக்கும். அல்லாஹ்வின்தூதரை விட அண்ணனும் நீங்களும் அதிபுத்திசாலிகளோ?)

ஸஹ்லா(ரழி) அவர்களுக்கு அப்போது கைக்குழந்தை இருந்ததா? நிரூபிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பி தம்மைப் பகுத்தறிவாளர்களாகவும் உலக மகா மேதைகளாகவும் பறைசாற்ற விரும்புபவர்களின் சிந்தனையில் முழுக்க முழுக்க ஷைத்தானின் ஆதிக்கம் நுழைந்திருப்பதையே இது எடுத்துக் காட்டுகின்றது.

இந்த ஹதீஸை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆயிஷா(ரழி) அவர்கள் ஸஹ்லா(ரழி) அவர்களது காலத்தில் வாழ்ந்தவர்கள். அவருக்கு அப்போது கைக் குழந்தை இல்லையென்றால் குழந்தை இல்லாமல் எப்படிப் பால் கொடுத்தார்கள் என்ற சிந்தனை ஆயிஷா(ரழி) அவர்களுக்கு வந்திருக்காதா? ஏன் வரவில்லை. குழந்தை இருந்ததால் வரவில்லை.

இந்த ஹதீஸை வைத்து ஆயிஷா (ரழி) அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் பால் புகட்டி மஹ்ரமான உறவுமுறையை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று கருதுகின்றார்கள். நபி(ஸல்) அவர்களது ஏனைய மனைவியர் இது ஸாலிம்(ரழி) அவர்களுக்குக்கு மட்டும் உரிய பிரத்தியேக சட்டம் என்ற கருத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கிடையில் இது குறித்து வாதப் பிரதிவாதங்கள் கூட இடம் பெற்றுள்ளது.

ஸஹ்லா (ரழி) அவர்கள் ஸாலிம்(ரழி) அவர்களுக்குப் பால் கொடுத்து தாய்-பிள்ளை உறவை ஏற்படுத்திக் கொண்டார்கள் என ஆயிஷா(ரழி) அவர்கள் கூறும் போது என்ன ஆயிஷா இப்படிக் கூறுகின்றீர்கள்? ஸஹ்லா எப்படிப் பால் கொடுத்தார்? அவருக்குத்தான் அப்போது குழந்தையே இருக்கவில்லையே! என்று ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை என்றால் அவருக்குக் கைக்குழந்தை இருந்துள்ளது என்றுதானே அர்த்தம்?

இமாம் மாலிக்(ரஹ்) அவர்களது முஅத்தாதான் முதலில் தொகுக்கப்பட்ட ஹதீஸ் கிரந்தமாகும். இமாம் மாலிக் ஆரம்ப கால இமாம்களில் ஒருவர் மதீனாவில் வசித்தவர். அவரது முஅத்தாவிலும் இந்த செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. (2247)

ஸஹ்லா(ரழி) ஸாலிமுக்குப் பால் கொடுத்ததாக சொல்லுகின்றோமே ஸஹ்லாவுக்கு அப்போது குழந்தை இருந்ததா?இல்லையா? என்ற கேள்வி இமாம் மாலிக் அவர்களுக்கு வரவில்லை. ஏன் இஸ்லாமிய வரலாற்றில் எந்தஒரு அறிவுஜீவிகளுக்கும் வரவில்லை. இது கெட்டபுத்தியுடையோரின் சிந்தனையாகும்.

இவர்கள் மறுக்கும் இந்த ஹதீஸை இமாம்களான புஹாரி முஸ்லிம் நஸாஈ இப்னுமாஜா அஹ்மத் பைஹகி தபறானி இப்னு ஸஅத் ஷாபீஈ போன்ற பலரும் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் இப்படியொரு கேள்வி எழவில்லை. இமாம் புஹாரி போன்றவர்கள் ஹதீஸ் கலையில் மட்டுமன்றி வரலாற்றுக் கலையிலும் பாண்டித்துவம் பெற்றவர்கள். ஸஹ்லாவுக்கு வேறு குழந்தைகள் இருக்கவில்லையே! என்ற சிந்தனை அவர்களுக்கு வரவில்லை.  என்றால் வேறு குழந்தை இருந்தது என்று அவர்கள் விளங்கி இருந்தார்கள்.
 
ஸஹாபாக்கள், நபி(ஸல்) அவர்களது மனைவியர்கள், நபித்தோழர்கள், இமாம்கள் யாருக்குமே வராத கேள்வி இந்த ஹதீஸை மறுப்பவர்களுக்கு வருகின்றது என்றால், இவகள் தவறான தப்பான வழியில் சிந்திப்பவர்கள் என்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. இவர்களது சிந்தனைப் போக்கும் ஹதீஸ்களை அணுகும் முறையும் பிழையானது என்பதைப் புரிய வைக்கத்தான் இந்த விளக்கங்களைக் கூறினோம்.

ஸஹ்லா(ரழி) அவர்களுக்கு அவரது கணவர் அபூஹுதைபா(ரழி) அவர்கள் மூலமாக முஹம்மத் என்ற பெயரில் ஒரு குழந்தை இருந்தது என்பது வரலாற்றில் மிகத் தெளிவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. வரலாற்றை எப்படி மூடி மறைக்கின்றார்கள் என்தைத் தெளிவு படுத்துவதற்காக இது குறித்து விரிவாக இங்கு விளக்கப்படுகின்றது.

ஸஹ்லா(ரழி) அவர்கள் தமது கணவர் அபூஹுதைபா((ரழி)) அவர்களுடன் ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள். அப்போது அங்கு வைத்து ஒரு குழந்தை கிடைத்தது. அபூஹுதைபா, ஸாலிம் இருவரும் யமாமா போரில் ஷஹீதான பின்னர் முஹம்மத் என்ற இவரை உஸ்மான்(ரழி) அவர்கள் பொறுப்பெடுத்து வளர்த்தார்கள். இந்த செய்தி இதுபோன்ற இருபதுக்கும் மேற்பட்ட வரலாற்று நூல்களில் பல இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
أسد الغابة
أنساب الأشراف
الدرر في اختصار المغازي والسير
الدرر لابن عبد البر
الروض الأنف
السيرة النبوية لابن كثير
تحقيق الجزء 6 من سبل الهدى والرشاد للإمام محمد الشامي
تهذيب سيرة ابن هشام

جوامع السيرة
سيرة ابن إسحاق
معرفة الصحابة لأبي نعيم
البدء والتاريخ
البداية والنهاية
تاريخ الإسلام للإمام الذهبي
نسب قريش
سير أعلام النبلاء
(1)        المستدرك (6901)- (4 ஃ 67)
المعجم الكبير للطبراني
الطبقات الكبرى لابن سعد
الأعلام للزركلي
الوافي بالوفيات

     
இது போன்ற இன்னும் பல நூற்களில் ஸஹ்லா(ரழி) அவர்களுக்கு முஹம்மத் என்ற பெயரில் ஒரு கைக்குழந்தை இருந்தது என்ற செய்தி மிகத் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. நபி(ஸல்) அவர்களது காலத்தில் முஹம்மத் எனப் பெயர் சூட்டப்பட்ட குழந்தைகள் பற்றிப் பேசும் போது கூட இவர் குறித்துப் பேசப்படுகின்றது. நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் போது இவருக்குப் பதினொரு வயது என்ற கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸைனப்(ரழி) அவர்களை நபி(
ஸல்) அவர்கள் மணப்பதற்கு முன்னர்தான் வளர்ப்புக் குழந்தை பற்றிய சட்டம் அருளப்படுகின்றது. ஸைனப்(ரழி) அவர்களை நபி(ஸல்) அவர்கள் ஹி. 3ல் அல்லது 5ல் மணந்தார்கள் என்ற தகவல்களைக் காணலாம். குழந்தைகளை அவர்களது தந்தையர்களுடன் சேர்த்து அழையுங்கள் என்ற வசனம் ஹிஜ்ரத்தின் ஆரம்பப் பகுதியில் அருளப்பட்டதாகும். ஸாலிம்(ரழி) அவர்களுக்குப் பால் கொடுத்த நிகழ்ச்சியும் அதையொட்டி ஹிஜ்ரத்தின் ஆரம்பப் பகுதியில் நடந்ததாகும். எனவே, ஸஹ்லா(ரழி) அவர்களுக்கு ஒரு கைக்குழந்தை இருக்கும் போதுதான் ஸாலிம்(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வு நடந்துள்ளதென்பது பல்வேறுபட்ட வரலாற்று நூல்கள் மூலம் உறுதி செய்யப்படுகின்றது. இத்தனை வரலாற்று நூல்களும் பேசக்கூடிய முஹம்மத் பின் அபூஹுதைபா என்ற ஸஹ்லா(ரழி) அவர்களின் குழந்தையின் வரலாற்றை இருட்டடிப்புச் செய்துவிட்டு அப்போது அவர்களுக்கு வேறு குழந்தைகள் இருக்கவில்லை, இருந்தது என்று கூறுபவர்கள் அதற்கான ஆதாரத்தைக் கூற வேண்டும் என்று குதர்க்க வாதம் புரிந்து வந்தனர்.

ஹதீஸ்களை விளங்கத்தெரியாத இவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் துஆச்செய்யுங்கள். அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
நன்றி: எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்

0 கருத்துகள்:

Post a Comment

Popular Posts